ஜனாதிபதியின் பொழுதுபோக்குக்காக 13 மில்லியன்கள் செலவிடப்பட்டுள்ளது. மங்கள
அலறிமாளிகையில் பொழுதுபோக்கு செலவினங்களுக்காக கடந்த ஆகஸ்ட மாதம் இரண்டாம் வாரத்திலிருந்து டிசம்பர் மாதம் 1 முதலாம் வாரம்வரை 13 மில்லியன் ரூபாக்கள் செலவிடப்பட்டுள்ளதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சி (மக்கள் பிரிவு) தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்:
மேலும் அவர் பேசுகையில் , ஆகஸ்ட மாதம் 1363667 ரூபாவும் , செப்டம்பர் மாதம் 2441525 ரூபாவும் , ஒக்டோபர் மாதம் 1747450 ரூபாவும் , நவம்பர் 3930525 ரூபாவும் , டிசம்பர் மாதம் 3416279 ரூபாவும் செலவிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதேநேரம் அலறி மாளிகையில் இடம்பெறும் தனது பொழுதுபோக்கு நிகழ்வுகளுக்கு அரசபணம் செலவிடப்படுவதில்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இது விடயமாக ஜனாதிபதியின் செயலாளர் ஊடகங்களுக்கு அறிக்கை ஒன்றையும் அனுப்பி வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments :
Post a Comment