பாதுகாப்பு செயலாளர் சண்டே லீடரிடமிருந்து ரூ. 100 கோடி நஷ்டஈடு கோருகிறார்
சன்டே லீடர் பத்திரிகைக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப் போவதாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜ பக்ஷ அறிவித்துள்ளார். சன்டே லீடர் பத்திரிகை பாதுகாப்புச் செயலாளருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் செய்திகளை வெளியிட்டதால், அதற்கு நட்ட ஈடாக நூறு கோடி ரூபாவை வழங்க வேண்டுமென்று பாதுகாப்புச் செயலாளரின் சட்டத்தரணி சனத் விஜேவர்தன, சண்டே லீடர் வெளியீட்டாளருக்கும் அதன் பிரதம ஆசிரியருக்கும் கோரிக்கைக் கடிதம் (வக்கீல் நோட்டிஸ்) அனுப்பி வைத்துள்ளார். நட்டஈட்டை வழங்க மறுக்கும் பட்சத்தில் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்புச் செயலாளருக்கு எதிராக அவதூறான செய்திகளை வெளியிடக்கூடாதென கல்கிஸை நீதிமன்றத்தில் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தும், அவ்வாறான செய்திகளை வெளியிட்டிருப்பதாக சண்டே லீடர் பத்திரிகையின் வெளியீட்டாளர் லால் விக்கிரமதுங்க மற்றும் அதன் பிரதம ஆசிரியர் ஆகியோருக்கு எதிராகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment