பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்வது தொடர்பில் துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்காக சட்ட மா அதிபர் திணைக்களம் பத்துப் பேர் கொண்ட குழுவொன்றை நியமித்துள்ளதாக நீதி, சட்ட மறு சீரமைப்பு பிரதியமைச்சர் வீ. புத்திரசிகாமணி தெரிவித்தார்.
மேற்படி குழு தடுத்துவைக்கப்பட்டுள்ள 631 பேர் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு குற்றவாளிகளுக்கெதிராக வழக்குத் தாக்கல் செய்யவும் நிரபராதிகளை விடுதலை செய்யவும் உரிய நடவடிக்கைகளைத் துரிதமாக முன்னெடுக்குமென பிரதியமைச்சர் தெரிவித்தார்.
தேசிய இணக்கச் சபை தின நிகழ்வு நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் அலரி மாளிகையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே பிரதியமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
No comments:
Post a Comment