அரசாங்க பாடசாலைகளில் முதலாம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை கல்வி பயிலும் ஒவ்வொரு மாணவருக்கும் மடிக்கணனி வழங்கும் திட்டம் அடுத்த மாதம் முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த தெரிவித்தார்.
பாடசாலைகளுக்கு கணனி மையங்களை பெற்றுத்தரும் திட்டத்தின்கீழ் ஹோமாகம கல்வி வலயத்தில் உள்ள 6 பாடசாலைகளுக்கு கணனி மையங்களை கையளிக்கும் நிகழ்வு நேற்று ஹோமாகம ஜலதர மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
அந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த மேற்கண்டவாறு தெரிவித்தார்.
2009ஆம் வருடத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தகவல் தொழில்நுட்ப வருடமாக அறிவித்ததையடுத்து கல்வி அமைச்சு செயற்படுத்தும் வேலைத் திட்டங்களும் சமகாலத்தில் இடம்பெற்று வருகின்றன. ஆரம்ப வகுப்புகளில் கல்வி பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் கணனி ஒன்றை பெற்றுத்தரும் திட்டமும் இதில் ஒன்றாகும்.
இந்த திட்டத்தின் முதலாவது கட்டத்தில் கஷ்டப் பிரதேசத்தில் உள்ள 13 பாடசாலைகளில் உள்ள 1500 மாணவருக்கு அடுத்த மாதம் முதல் கணனிகள் பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக அமைச்சர் அங்கு தெரிவித்தார்.
No comments:
Post a Comment