ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸநாயக்கவை தமது பக்கம் இழுத்துக் கொள்ள அரசு தீவிர முயற்சி மேற்கொண்டுவருவதாக செய்திகள் தெரிவிக்கின்றது. S.B.திஸநாயக்கவை பல தடவைகள் சந்தித்த அரசின் முக்கியஸ்தர்கள், அவர் சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணையும்போது அவருக்கு கட்சியில் முக்கிய பதவிகளும், எதிர்வரும் தேர்தலின் பின்னர் பிரதமர் பதவியும் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
இவ்விடயமாக சண்டே லீடர் பத்திரிகைக்கு கருத்து தெரிவித்த S.B தன்னை சந்தித்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சிலர் தமது கட்சியில் இணைந்து கொண்டு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்சவிற்கான தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடுமாறும், வெற்றியீட்டினால் பல பதவிகளை வழங்குவதாக தெரிவித்தாகவும், ஆனால் தான் பதவிகளுக்காக எந்தக் கட்டத்திலும் ஐக்கிய தேசியக் கட்சியை விட்டு விலகப்போவதில்லை என அவர்களது வேண்டுதலை மறுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment