Wednesday, November 18, 2009

காத்தான்குடி நகர சபை உறுப்பினர் தலை மறைவு.

காத்தான்குடியைச் சேர்ந்த தொழிற்சங்க ஆயுட்காலத் தலைவரும் நகர சபை உறுப்பினருமான எம். கலந்தர் லெப்பை (செல்லமாக தக்காலி அழைக்கப்படுபவர்) அவர்கள் திடீரென தலைமறைவாகியுள்ளார். இவர் காத்தான்குடி அபிவிருத்திச் செயற்பாடுகளிலும், வீதி அமைப்பு, வீதி அபிவிருத்தி என்பவற்றிலும் பல இலட்சம் ரூபா பெறுமதியான மோசடிகளில் ஈடுபட்டதுடன் தன்னினச் சேர்கையில் ஈடுபட்டு குற்றமிழைத்தால் பொலிசாரினால் தீவிரமாக தேடப்பட்டுக் கொண்டிருக்கிறார்.

இவர் சம்பந்தமான பல ஊழல்கள் உள்ளூர் பத்திரிகை ஒன்றில் தொடர்சியாக பிரசுரிக்கப்பட்டு இவரதும் இவருடைய முக்கிய அரசியல் வாதியினதும் அடியாக்களால் அப்பத்திரிகையின் ஆசிரியர் கடுமையாக தாக்கப்பட்டு பத்திரிகை காரியாலயமும் முழுமையாக தீக்கிரையாக்கப்பட்டதனால் அப்பத்திரிகை ஆசிரியர் தற்போது ஊரை விட்டு கொழும்பில் வேறு ஒரு பத்திரிகை ஆசிரியராக தற்போது பணிபுரிந்து கொண்டிருப்பதும் அவரது உள்ளூர் பத்திரிகை முழுமையாக நின்றுவிட்டதும் குறிப்பிடத்தக்க கடந்தகால வருந்தத்தக்க விடயமாகும்.

அதேவேளை இவரை கிழக்குமாகாண சபையின் பிரபல அமைச்சர் ஒருவர் தனது திருகோணமலைக் காரியாலயத்தில் தேடப்பட்டுவரும் குற்றவாளியான கந்தர் லெப்பையை மறைத்து வைத்திருப்பதாக சில நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


கிழக்கிலிருந்து விசேட தொடர்பாளர்

No comments:

Post a Comment