ஈரான் அணு திட்டத்திற்கு உதவியா ? : ரஷ்யா மறுப்பு
ஈரானின் அணு திட்டத்திற்கு உதவுவதாக கூறப்படும் குற்றச்சாற்றை ரஷ்யா கடுமையாக மறுத்துள்ளது. ஈரானின் அணு ஆயுத திட்டத்திற்கு ரஷ்யா உதவி வருவதாக வாஷிங்டனைச் சேர்ந்த ' அணு ஆயுத பரவல் தடுப்பு கொள்கை கல்வி மைய' த்தின் நிர்வாக இயக்குனராக பணியாற்றும் ஹென்றி ஷோகோல்ஸ்கி என்பவர், " வாஷிங்டன் டைம்ஸ் " பத்திரிகையில் எழுதிய கட்டுரை ஒன்றில் குற்றம் சாற்றியிருந்தார்.
இந்நிலையில் இந்த குற்றச்சாற்று அடிப்படை ஆதாரமற்றது என்று ரஷ்ய அயலுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் மறுத்துள்ளது.
ஈரானில் அணு ஆயுதங்கள் உருவாகி வருவது அமெரிக்காவைப் போன்றே தங்களுக்கும் ஏற்புடையதல்ல என்றும், தாங்கள் இதனை ஏற்கனவே பல முறை கூறிவிட்டதாகவும் அந்த அறிக்கையில் ரஷ்யா மேலும் தெரிவித்து ள்ளது.
0 comments :
Post a Comment