Sunday, November 15, 2009

ஜெனரல் பொன்சேகாவிற்கு இராணுவம் பிரியாவிடை : அரசியல் யுத்தம் ஆரம்பம். பீமன்

ஜெனரல் சரத் பொன்சேகாவின் ஓய்வு பெறும் விண்ணப்பம் நாட்டின் ஜனாதிபதியினால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதுடன் இன்று அவருக்கான பிரியாவிடை நிகழ்வு ஒன்று இராணுவத் தலைமையகத்தில் இடம்பெறும் எனவும் தெரியவருகின்றது. மிகவும் எளிதாக இடம்பெறவுள்ள அந்நிகழ்வில் இலங்கை அரசியலின் புதிய யுத்தம் ஒன்று ஆரம்பமாகின்றது என்ற உண்மையை உணர்ந்த மக்கள் சரத்பொன்சேகா அந்நிகழ்வில் என்ன பேசப்போகின்றார் என்பதை ஆர்வத்துடன் எதிர்பார்த்து நிற்கின்றனர்.

வன்னியிலே யுத்தம் இடம்பெற்றுக் கொண்டிருந்தபோது அன்றைய இராணுவத் தளபதியான ஜெனரல் சரத் பொன்சேகாவை புகழ்ந்து தள்ளிய ஊடகங்கள் பலவும் நேற்றுடன் அமத்தி வாசிக்க தொடங்கியுள்ளதையும் அவதானிக்க முடிகின்றது. குறிப்பாக புலிகளுக்கு எதிராக தமது நியாயமான கருத்துக்களை முன்வைத்து வந்த தமிழர்களால் இயக்கப்படுகின்ற தமிழ் , ஆங்கில இணையங்கள் ஜெனரல் பொன்சேகா விற்கு எதிரான கருத்துக்களை இனவாதமாக கக்க முனைவதை காண முடிகின்றது.

இலங்கை அரசிற்கும் ஜெனரல் பொன்சேகாவிற்கும் இடையிலான உராய்வு எவ்வாறு உருவானது என்கின்ற உண்மைகள் இதுவரை எந்த தரப்பாலும் சரியாக வெளிவிடப்பாடத நிலையில் பல ஊடகங்களும் ஊகங்களையே பெரும்பாலும் வெளிவிட்டு வந்தது. ஆனால் நிலைமை மாற்றத்திற்கான உண்மையான காரணங்கள் வெளிவருவதற்கு நீண்ட காலங்கள் செல்லாது. இந்நிலையில், இலங்கை அரசை ஆதரிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக தவறுகளை நியாயப்படுத்த முண்டியடித்துக் கொண்டு மூக்குடைபடுவது சிறந்ததல்ல.

மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் காலம் காலமாக தமது தேவைகளுக்காக நபர்களை பாவித்து விட்டு நடுத்தெருவில் விட்டு வந்திருப்பது வரலாறு. இதில் இன்றைய ஆழும் அரசான ஐக்கிய மக்கள் முன்னணியினரோ, ஆட்சியை கைப்பற்றத் துடிக்கும் ஐக்கிய தேசியக் கட்சியினரோ ஒருவருக்கு ஒருவர் குறைந்தவர்கள் அல்லர். கடந்த காலங்களில் தமிழ் அரசியல் கட்சிகள், முன்னாள் விடுதலைப் போராட்ட இயக்கங்கள், விடுதலைப் போராட்ட இயக்கங்களை உதறித் தள்ளிவிட்டு படையினருடன் இணைந்து செயற்பட்ட தமிழ் இளைஞர்கள், புலிகளிக்கு எதிரான யுத்தத்தில் தங்களை முற்று முழுதாக அர்பணித்து படையினருடன் இணைந்து செயற்பட்ட தமிழர்கள், முஸ்லிம்கள் என எத்தனையோ பேர் அரசாங்களால் நடுத்தெருவில் விடப்பட்ட சம்பவங்கள் யாவரும் அறிந்தது. அவ்வாறனதொரு நிகழ்வே ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கும் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது. அரசுகளால் இத்தனை காலமும் தூக்கியெறியப்பட்ட கறிவேப்பிலைகளிலும் பார்க்க சரத்பொன்சேகா எனும் கறிவேப்பிலை சிறிது வித்தியாசமான கறிவேப்பிலை. அக்கறிவேப்பிலையை கறியில் இருந்து எடுத்து எறிந்தாலும் அதன் வாசாம் வீசத்தான் செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்த புறப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியினர் கறிவேப்பிலையை தமது பக்கம் தூக்கி வைத்துள்ளனர். பல வியூகங்கள் வகுக்கப்பட்டது, வகுக்கப்படுகின்றது. வகுக்கபட்ட வியூகங்களை இரு தரப்பும் சாதுரியமாக நகர்த்தியுள்ளதையும் நடந்து முடிந்துள்ள விடயங்கள் எடுத்துக்காட்டுகின்றது.

சரத் பொன்சேகாவை பொது வேட்பாளராக நிறுத்துவதற்கு ரணில் உளமாற ஏற்றுக்கொண்டாரா?

ஏற்றுக்கொண்டேன் என பத்திரிகைகளுக்கு தெரிவித்திருந்தார். ஆனால் அவ்விடயத்தின் பின்னணியில் அவர் எதிர்பார்த்தது வேறு விடயம். சரத்பொன்சேகா வை ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக நிறுத்துவதாக கூறி அவருக்கு மிகவும் நம்பிக்கை ஊட்டி அவரை அரசிற்கு எதிராக திருப்புவது. அவ்வாறு அவர் திரும்பும் போது அரசு அவரை ஏதாவது ஓர் குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்து சிறையில் அடைக்கும். அவர் சிறையில் அடைக்கப்பட்டால் மக்களிடம் இருந்து அரசிற்கு எதிரான பலத்த எதிர்ப்பு கிளம்பும் என்பதும், சரத்பொன்சேகா அரசியலில் நுழையும் நோக்குடன் இராஜனாமா கடிதத்தை பாரமளிக்கும்போது அது ஜனாதிபதி யினால் ஏற்றுக்கொள்ளப்படாமல் நிராகரிக்கப்படும் எனவும் அவ்வாறு அது நிராகரிக்கப்படும்போது அதன் விளைவுகளும் அரசிற்கு எதிராக அமையும் என்பதுடன் சரத் பொன்சேகா எதிர்கட்சிகளுக்கு ஆதராவாக செயற்படும் தீவிர நிலைமை உருவாகும், அப்போது எதிர்கட்சிகளின் வேட்பாளராக போட்டியிட முடியும் என்பது ரணிலின் வியூகமாகவிருந்தது.

புதிய வியூகம்.
ஆனால் மேற்குறிப்பிட்ட எதிர்பார்புக்கள் எதுவும் நிறைவேறாத நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி யினால் இன்று புதிய வியூகம் ஒன்று அமைக்கப்படுகின்றது. எதிர்கட்சிகளின் சார்பாக ரணில் போட்டியிடுவதுடன் பிறிதொரு கட்சியின் சார்பாக ஜெனரல் சரத் பொன்சேகாவை வேட்பாளராக நிறுத்துவது, அவ்வாறு சரத் பொன்சேகா எதிர்கட்சிகளின் கூட்டணி தவிர்ந்த கட்சி ஒன்றின் சார்பாக நிற்கும் போது மஹிந்த ராஜபக்ச சார்பான பௌத்த மக்களின் வாக்குகள் உடைபட்டு இரண்டாக பிரிந்து மஹிந்த விற்கும் சரத் பொன்சேகாவிற்கும் செல்லும்போது, ஐக்கிய தேசியக் கட்சி தலைமை தாங்குகின்ற எதிர்கட்சிகளின் கூட்டணிக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் அசையா வாக்குகளும், மலைநாடு மற்றும் வட-கிழக்கு தமிழரின் வாக்குகளையும் கொண்டு ரணில் வெற்றியடைவான் என ஐக்கிய தேசியக் கட்சி நம்புகின்றது.

சரத் பொன்சேகா வின் நிலைப்பாடு என்ன?

எதிர்வரும் தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக சரத் பொன்சேகா என்ன நிலைப்பாட்டை கொண்டுள்ளார் என்பது அவரால் தெளிவாக கூறப்படவில்லை என்பதை விட அதற்கான சந்தர்ப்பம் அவருக்கு இதுவரை கிடைக்க வில்லை எனலாம். எதுவாக இருந்தாலும் கடந்தகால யுத்தத்தில் கசப்பான நினைவுகளை சுமந்துள்ள மக்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசிற்கோ சரத் பொன்சேகா விற்கோ வாக்களிக்க மாட்டார்கள் என்பது தெளிவு. அத்துடன் நடந்து முடிந்துள்ள யுத்தத்தின் சகல பொறுப்புக்களையும் தான் ஏற்றுக்கொள்வதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இந்நிலையில் எதிர்காலத்தில் தனது அரசியல் செயற்பாடுகள் மற்றும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு என்பன தொடர்பாக சரத் பொன்சேகா விளக்கும் போது அதை ஓர் புதிய அத்தியாயமாக மக்கள் அணுக முயல்வார்களா என்பது இதுவரை எவராலும் எதிர்வு கூறமுடியாத விடயமாகவுள்ளது.

புலிக் கூத்தமைப்பின் காட்டில் மழை

எது எவ்வாறாயினும் இன்று தெற்கின் அரசியல் போட்டிகளால், புலிக் கூத்தமைப்பின் காட்டில் மழைபெய்யத் தொடங்கியுள்ளது. நேற்று விசேட விமானங்கள் மூலம் புலிக்கூத்தமைப்பின் முன்னணி கோமாளிகள் மன்னார் வவுனியா பிரதேசங்களுகுச் சென்றுள்ளனர். புலிகளை வைத்து பாராளுமன்றம் சென்ற கோவேறு கழுதைகள் இம்முறை ஆழும் அரசின் அனுசரணையுடன் பாராளுமன்றம் செல்லவுள்ளனர். ஆனால் மஹிந்த அரசு தனது வியுகங்களில் சறுக்கும் முதலாவது இடம்மாக புலிக் கூத்தமைப்பிற்கு தளம் அமைத்து கொடுப்பதுவே அமையப்போகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேர்தலுக்கான சகல வழங்களையும் அனுசரணைகளையும் மஹிந்த அரசிடம் இருந்து பெற்றுக்கொண்டு ஆசனங்களைக் கைப்பற்றிக் கொண்டதும் அவ்வாசனங்களை கொண்டு ஐக்கிய தேசியக் கட்சியை அரியணை ஏற்ற முடியுமாக இருத்தால் அவ்விடயத்தையே முதன்முதலாக செய்யும் என்பதில் எவ்வித சந்தேகங்களும் கிடையாது. அதே நேரம் புலிக் கூத்தமைப்புடன் மஹிந்த அரசு கூட்டுச் சேரும் விடயம் சிங்கள மக்களிடம் செல்லும்போது, இத்தனை ஆயிரம் படைவீரர்களை பலி கொடுத்து புலிகளை தோற்கடித்த பின்னர் புலிகளியக்கத்தை தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக உலகிற்கு பறைசாற்றிய கூட்டமைப்புடன் என்ன கூட்டு என்ற கேள்வி போரில் தமது உறவுகளை பலி கொடுத்த சிங்கள மக்கள் மத்தியில் எழும்போது லட்சக்கணக்கான வாக்குகளை எதிர்கட்சி பக்கம் திருப்பும்.

புலிகளின் ஆயுத பலம் கொண்டு மக்களின் வாக்குகளை அபகரித்துச் பாராளுமன்றம் சென்ற கோவேறு கழுதைக் கூட்டம் இம்முறை, சரத் பொன்சேகா வை படம் காட்டி நாம் சரத் பொன்சேகாவை தோற்கடிக்கவேண்டும் என மக்களை ஏமாற்றி மேலும் ஐந்து வருடங்களுக்கு சுகபோகம் அனுபவிப்பர் என்பது மட்டும் வெளிப்படை.

புலிகள் உயிருடன் இருந்தபோது சர்வ கட்சி குழுவின் அமர்வுகள் முதற்கொண்டு, தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண மேற்கொள்ளப்பட்ட ஒழுங்குகள் அனைத்தையும் நிராகரித்துவந்த கழுதைகள் தற்போது மஹிந்தவின் முதுகில் பயணம் செய்ய ஆரம்பித்துள்ளனர். இற்றைக்கு 3 மாதங்களுக்கு முன்னர் ஜனாதிபதியை முதன் முறையாக சந்திக்கச் சென்ற புலிக் கூத்தமைப்பு தமிழ் மக்களின் தீர்வு தொடர்பாக தாம் ஒர் முன்மொழிவாக தீர்வுப்பொதி ஒன்றை எழுதி வருவதாகவும் அதை இருவாரங்களில் ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளதாகவும் தெரிவித்திருந்தனர்.

ஆனால் அவ்விடயம் கூறப்பட்டு சில நாட்களில் அவர்களின் பேனாக்களில் மை தீர்ந்து விட்டது. மூன்று மாதங்களின் பின்னர் பேனா வை இறுக்கி குலுக்கியதாகவும் சொட்டு மை பேணா நுனிக்கு வந்துள்ளதாகவும் இப்ப செய்யப்போவதாகவும் தெரிவித்துள்ளனர். பொறுத்திருந்து பார்போம் நுனியில் நிற்கும் மை எப்போது வெளியில் கக்கி தமிழர் சறுக்கி விழுவர் என.

No comments:

Post a Comment