Wednesday, November 25, 2009

சட்டவிரோத குடியேறிகள் தொடர்பாக விசாரணைகளைத் தொடரும் ரகசியப் பொலிஸார்.

காலி கடற்பரப்பின் மேற்கே நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட சட்டவிரோத குடியேறிகளில் 69 பேர் கொண்ட குழு காலி பூசா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கென விசேட ரகசியப் பொலிஸ் பிரிவொன்று காலி விரைந்துள்ளதாக தெரியவருகின்றது.

விசாரணைகளை மேற்கொள்ளும் இரகசியப் பொலிஸார் இலங்கையில் முதற்தடவையாக விமானப்படை மற்றும் கடற்படையின் இணை நடவடிக்கையில் தடுத்து நிறுத்தப்பட்ட குறிப்பிட்ட சட்டவிரோத ஆட்கடத்தல் வியாபாரத்தின் பின்னணியை கண்டறிய முயல்வர் என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட படகுகளில் இருந்து கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் மிகவும் நோய்வாய்ப்பட்ட நிலையில் காணப்பட்டதுடன் அவசர சிகிச்கைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். படகு தடுத்து நிறுத்தப்பட்டிருக்காத பட்சத்தில் அவர் உயிர் இழக்க நேரிட்டிருக்கும் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.






0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com