முன்னாள் புலி உறுப்பினர்களுக்கான புனர்வாழ்விற்கு அரசு நிதி உதவி கோருகின்றது.
புலிகளியக்கத்தில் இருந்து சரணடைந்து மற்றும் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ள புலிகளியக்க உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வளிக்க அரசாங்கம் ஐ.நா சபையின் ஸ்தாபனங்கள், வெளிநாட்டு உதவி வழங்கும் நிறுவனங்கள், உள்ளுர் வர்த்தகர்களிடம் இருந்து உதவியை கோருகின்றது.
பத்திரிகையாளர் மாநாடொன்றில் பேசிய புலிகளின் புனர்வாழ்வுக்கான ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தயா ரத்நாயக்க இவ் வேண்டுகோளை விடுத்துள்ளார். அவர் தொடர்ந்து பேசுகையில், 556 குழந்தைப் புலிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு 273 பேர் கொழும்பு ரத்மலானை இந்துக் கல்லூரியில் கல்வி பயின்று வருவதாகவும், 293 பேர் வவுனியா பூந்தோட்டம் தொழில் பயிற்சிக் கல்லூரியில் பயின்று வருவதாகவும் தெரிவித்தார்.
1854 பெண்புலிகள் பல்வேறு துறைகளிலும் பயிற்சிளைப் பெற்றுவருவதாகவும், 8 தொழிற்பயிற்சி நிறுவனங்கள் வவுனியாவிலும் யாழ்பாணத்திலும் திறந்து வைக்கப்படவுள்ளதாகவும் மேலும் கூறியுள்ளார்.
0 comments :
Post a Comment