வடக்கின் ஊடகவியலாளர்களில் ஒரு பகுதியினர் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவு.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக ஜெனரல் சரத் பொன்சேகா போட்டியிடுவாராக இருந்தால் அவரை ஆதரிப்பதென்ற முடிவுக்கு வடக்கின் மூத்த ஊடகவியலாளர்களில் ஒரு தொகுதியினர் வந்துள்ளதாக தெரியவருகின்றது.
அவர்கள் அவ்வாறு ஜெனரல் பொன்சேகாவை ஆதரிப்பதற்கான காரணங்கள் பல கூறியுள்ளனர்.
நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழித்தல், நாட்டின் சட்டத்தை மதித்து சகல இன மக்களையும் சமமாக பேணுதல், இலங்கையில் இடம்பெறுவதாக கூறப்படுகின்ற மோசடிகளை ஒழித்தல் போன்ற விடயங்களுக்கு முதலிடம் கொடுத்து அவற்றை நிறைவேற்றுவதாக உத்தரவாதம் அளிப்பாராக இருந்தால் அவரை ஆதரிக்க தாம் தயாராவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அத்துடன் இலங்கையில் இடம்பெற்றுள்ள யுத்தத்தின் நன்மை தீமைகள் யாவற்றுக்கும் தான் பொறுப்பு என ஜனாதிபதி கூறியுள்ள நிலையில் ஜெனரல் பொன்சேகாவிடம் இருந்து போர் தொடர்பாக எதுவும் எதிர்பார்க்க முடியாது எனவும் தெரிவித்துள்ளனர்.
அதே நேரம் தெற்கிலிருந்து ஆட்சிக்கு வரும் எந்தத் தரப்பும் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண முனையப்போவதில்லை என்ற கடந்த கால அனுபங்களை கொண்டு, தாம் எந்த தரப்பையும் ஆதரிக்காமல் அமைதி காக்கப்போவதாக ஒரு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment