Wednesday, November 25, 2009

மாத்திரைக‌ளா‌ல் ஆரோக்கிய‌த்‌தி‌ற்கு ஆபத்து!

இன்றைய அவசர உலகில் பலரும் காய்ச்சல், தலைவலி மற்றும் சின்னச் சின்ன உடல் சிக்கல்களுக்கு‌க் உடனடியாக ஒரு மா‌த்‌திரையை ‌விழு‌ங்க வே‌ண்டு‌ம். உடனே உட‌ல் உபாதை ‌தீர வே‌ண்டு‌ம் எ‌ன்று கருது‌கி‌ன்றன‌ர். அ‌‌திலு‌ம், ‌உ‌ரிய மரு‌த்துவரை ச‌ந்‌தி‌த்து அவ‌ர் எழு‌தி‌க் கொடு‌க்கு‌ம் மா‌த்‌திரையை‌ச் சா‌ப்‌பிட‌க் கூட அவ‌ர்களு‌க்கு நேர‌மி‌ல்லையா‌‌ம். அதனா‌ல் பலரு‌ம் நேராக மருந்து கடைகளு‌க்குச‌் செ‌ன்று த‌ங்களது ‌பிர‌ச்‌சினைகளை‌க் கூ‌றி ஏதாவது மாத்திரைகளை வாங்கி சாப்பிட்டு விடுகின்றனர்.

இது மாத்திரையை மட்டுமல்ல... ஆபத்தையும் விலை கொடுத்து வாங்குகிறோம் என்று தெரியாமல் செய்கின்றனர். ஆனால் அவர்கள் கேட்கும் கேள்வி, இப்படி சின்னச் சின்ன விஷயத்துக்கெல்லாம் டாக்டரிடம் போக முடியுமா? எ‌ன்பதுதா‌ன்.

இது நமது உடல் சம்பந்தப்பட்டது என்பதை முத‌லி‌ல் உணர வேண்டும். ‌ஒ‌வ்வொரு வ‌லியு‌ம் ஒரு நோ‌யி‌ன் அ‌றிகு‌றி எ‌ன்பதை உணர வே‌ண்டு‌ம். ஒருவரு‌க்கு தலை வ‌லி‌க்‌கிறது எ‌ன்றா‌ல் அத‌ற்கு எ‌த்தனை எ‌த்தனை காரண‌ங்க‌ள் இரு‌க்கலா‌ம் எ‌ன்று தெ‌ரியுமா? பா‌ர்வை‌க் கோளாறு, சைன‌ஸ் ‌பிர‌ச்‌சினை, தலை‌யி‌ல் ‌நீ‌‌ர் அழு‌த்த நோ‌ய் என ப‌ல்வேறு ‌விஷய‌ங்களா‌ல் தலைவ‌லி ஏ‌ற்படலா‌ம். இதையெ‌‌ல்லா‌ம் பா‌ர்‌க்காம‌ல், வெறு‌ம் தலைவ‌லியை‌ப் போ‌க்க ‌வ‌லி ‌நிவார‌ணி சா‌ப்‌பிடுவதா‌ல் ஒரு ‌வியா‌தியை நம‌க்கு உண‌ர்‌த்துவத‌ற்காக வ‌ந்த தலைவ‌லி போ‌ய்‌விடலா‌ம். ஆனா‌ல் அ‌ந்த நோ‌ய்... ந‌ம்மை எ‌ன்ன செ‌ய்யு‌ம் எ‌ன்று ‌சி‌ந்‌தி‌த்து‌ப் பாரு‌ங்க‌ள்.

மேலு‌ம் ‌சிலர‌் எடு‌த்தத‌‌ற்கெ‌ல்லா‌ம் மா‌த்‌திரை போடு‌கிறா‌ர்க‌ள். இதனா‌ல், உட‌லி‌ல் இரு‌க்கு‌ம் நோ‌ய் ‌எ‌தி‌ர்‌ப்பு ச‌க்‌திக‌ள் பயன‌ற்று‌ப் போ‌கி‌ன்றன. அவ‌ற்‌றி‌ற்கு வேலை கொடு‌க்காமலேயே ‌வி‌ட்டு‌விடுவதா‌ல், அவ‌ற்‌றி‌ற்கு‌ம் இய‌ங்கு‌ம் ச‌க்‌தியே‌ப் போ‌ய், அவ‌ர் ஒரு மா‌த்‌திரை ம‌னிதனா‌கி‌ப் போ‌ய்‌விடுவா‌ர்‌.

பொதுவாக பலரு‌ம், ஒரு மரு‌த்துவ‌ரிட‌ம் செ‌ன்று நோயை‌க் கூ‌றியது‌ம், அவ‌ர் எழு‌தி‌க் கொடு‌‌க்கு‌ம் மரு‌ந்தை‌ப் போ‌ட்டது‌ம் நோ‌ய் ச‌ரியா‌கி‌வி‌ட்டா‌ல் உடனே அவ‌ர் கைரா‌சி ம‌ரு‌‌த்துவ‌ர் எ‌ன்று கூறு‌கி‌ன்றன‌ர். ஆனா‌ல் அவ‌ர் அ‌ந்த பெய‌ர் எடு‌ப்பத‌ற்காக, எ‌வ்வளவு அ‌திக ‌வீ‌ரிய‌மி‌க்க மரு‌ந்துகளை நம‌க்கு ப‌ரி‌ந்துரை‌க்‌கிறா‌ர் எ‌ன்று அ‌றி‌ந்‌திரு‌ப்போமா?

‌சில மரு‌த்துவ‌ர்க‌ள் எழு‌தி‌க் கொடு‌க்கு‌ம் மா‌த்‌திரைக‌ளி‌ல் அ‌திக‌ப்படியான செயலா‌ற்று‌த் ‌திற‌ன் காரணமாக, நோ‌ய் பா‌தி‌த்தவ‌ர், நோ‌யி‌ன் தா‌க்குதலை ‌‌விட, மரு‌ந்‌தி‌ன் தா‌க்க‌த்‌தினா‌ல் கடுமையாக பா‌தி‌க்க‌ப்படு‌ம் ‌நிலை ஏ‌ற்படு‌ம். தலை சு‌ற்ற‌ல், கை கா‌ல் நடு‌க்க‌ம், நா‌க்கு, உதடு வற‌ண்டு போவது, உட‌லி‌ல் ‌‌நீ‌ர்‌த்த‌ன்மை குறைவது, ‌நினை‌வை இழ‌ப்பது வரை ஒரு மா‌த்‌திரை‌யி‌ன் ப‌க்க ‌விளைவுக‌ள் ஏராள‌ம் ஏராள‌ம்.

இப்படி நாம் நம்முடைய இஷ்டத்திற்கு வாங்கி சாப்பிடும் மாத்திரைகள் அப்போதைய நிவாரணி என்றாலும், பின்னாளில் நம்முடைய உடலுக்கு பெரும் தீங்கினை விளைவிக்கும் என்று கூறுகின்றனர் மருத்துவ ஆய்வாளர்கள்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com