கட்டாரை தளமாக கொண்டியங்கும் பிரைட் பியூச்சர் பாக்கிஸ்தான் ஸ்கூல் இலங்கையில் யுத்தத்தில் ஈடுபட்டுவந்த இராணுவத்தினரின் நலன்களை மேன்படுத்துவதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள ('அபி வெனுவன் அபி பன்ட்') (Be together for all) எல்லோரும் ஒன்றாய் இணைந்து நிதியத்திற்கு தாங்கள் சேகரித்த பணத்தினை அண்மையில் கையளித்தது.
இந்த நிதி BFPS (Bright Future Pakistani School)யினால் கடந்த ஜூலை மாதத்திலிருந்து சேகரிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான காசோலையை இப் படசாலையின் அலுவல்களுக்குப் பொறுப்பான தலைவர் ஜானக குலசேகர அண்மையில் கொழும்பில் வைத்து ஜனாதிபதியிடம் கையளித்தார்.
'அபி வெனுவன் அபி பன்ட்' என்பது இலங்கை பாதுகாப்பு அமைச்சும் மத்திய வங்கியும் இணைந்து இராணுவத்தில் சேவையாற்றியவர்களுக்காக 50,000 வீடுகளை அமைக்கும் திட்டமாகும்.
தகவல்-கல்ப் டைம்ஸ்.
No comments:
Post a Comment