Wednesday, November 25, 2009

ஐரோப்பா, கனடாவில் இடம்பெறவுள்ள மாவீரர்தின நிகழ்வுகளின் வன்செயல்கள் இடம்பெறலாம்.

ஐரோப்பாவில் உள்ள சில நாடுகள் , கனடா மற்றும் சில இடங்களிலும் மாவீரர் தின நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்நிகழ்வுகளில் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்தப்படுமா இல்லையா என்பது இதுவரை அறிவிக்கப்படவில்லை.

பிரபாகரன் இறந்துவிட்தாக அறிவித்த கே.பி தரப்பினருக்கும், கஸ்ரோ வழிவந்த நெடியவனை தலைமையாக ஏற்றுக்கொண்டுள்ள தரப்பினருக்கும் இடையில் பிரபாகரனை இறந்து விட்டதாக அறிவித்தவிடயத்திலேயே முறுகல் ஆரம்பமாகியிருந்தது என்பது யாவரும் அறிந்த விடயம்.

இந்நிலையில் இம்முறை பல இடங்களிலும் நிகழவுள்ள மாவீரர் தின நிகழ்வுகள் தொடர்பாக பிளவுபட்டுள்ள புலிகளிடையே பலத்த முரண்பாடுகள் காணப்படுகின்றது.

ஆனால் மாவீரர் தின நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ள புலிகளின் ஒரு தரப்பினர் புலிகளின் தலைவர் உயிருடன் இருக்கின்றாரா இல்லையா என்ற கேள்வியை எழுப்புவர். அப்போது பதில் எதுவாக இருந்தாலும் அங்கு மோதல்கள் வெடிக்கும் காரணம், பிரபாகரன் இருக்கின்றார் என்ற செய்தியை தொடர்ந்தும் பரப்பி பிழைப்பு நாடாத்தவிருக்கும் புலிகளும் , பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்தவேண்டும் என துடிக்கும் புலிகளும் மோதும் நாளாக மாவீரர் தின நாளே அமையப்போகின்றது.

எனவே மாவீரர் தின நிகழ்வுகள் இடம்பெறும்போது அங்கு பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்தப்படுமாயின் பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார் என்ற செய்தியை சொல்லி தொடர்ந்தும் மக்களை ஏமாற்றி பிழைக்க நிற்கும் கும்பல் நிச்சயமாக அங்கு புகுந்த எமது தலைவர் சாகவில்லை, என வன்செயலில் இறங்க தாயாராக உள்ளதாக சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு நெருக்கமானவர்களின் நடைமுறைகளில் இருந்து தெரியவருகின்றது.

அவ்வாறு வன்செயல்கள் இடம்பெறுமாயின் நிச்சயமாக அது வாள் வெட்டு, கத்திகுத்து என ஆரம்பித்த துப்பாக்கிச் சமரில்கூட முடியலாம் எனவும் நம்பப்படுகின்றது.

இங்கு குறிப்பிடத்தக்க விடயம் யாதெனில் மாற்றுக்குழுக்கள் தமது பழைய கோப தாபங்களை தீர்த்துக்கொள்ளும் பொருட்டு இருதரப்பினருக்கும் இடையில் பாரிய போர் ஒன்றை மூட்டிவிடுவதில் மிகவும் துரிதமாக செயற்பட்டுவருவதையும் அவதானிக்க முடிகின்றது.

அதே நேரம் இவ்வாறன சம்பவம் ஒன்று நிகழும் என்பதை மறுக்க முடியாது என்பதை உணர்ந்த ஜேர்மன் புலிகளின் முக்கியஸ்தர் ஒருவர் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். ஆனால் புலிகள் உள்ளிருந்து மோத ஆரம்பிக்கும்போது பாதுகாப்பு யாருக்கு என்பதுதான் பிரதானமான கேள்வி.

எனவே மக்கள் இந்நிகழ்வுகளுக்கு சிறார்கள், பெண்பிள்ளைகள் ஆகியோரை அழைத்துச் செல்வதை தவிர்த்துக் கொள்வது சிறந்ததாகும்.

No comments:

Post a Comment