ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் பனடோல் இல்லையென அங்குவரும் ஏழை நோயாளர்கள் ஏனைய மாத்திரைகள் வழங்கப்பட்டு பனடோலை வெளியில் வாங்குமாறு கூறி அனுப்பி வைக்கப்படுகின்றனர். தற்போது அடைமழைக்காலம் என்பதால் அதிகளவான சிறார்கள் சளி, சாய்சல் போன்ற வியாதிகளுக்கு இந்த அரச வைத்தியசாலைகளுக்கு வருகின்றனர். இதில் பெரும்பாலானவர்கள் பாரம ஏழைகள், கூலித் தொழில் செய்பவர்கள் தற்போது பெய்யும் மழையின் காரணமாக பசி,பட்டினி என வாழும் இவர்கள் நோய்காக மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டால் ஒவ்வொரு காலத்திற்கு ஒவ்வொரு மருந்து மாத்திரைகள் இல்லை என இந்த வைத்தியசாலைகளில் கூறப்படுகிறது.
ஆரையம்பதி என்பது கிழக்குமாகாண சுகாத அமைச்சரின் நேரடிக் கட்டுப்பாட்டிலுள்ள ஊராகும் இவ் வைத்தியசாலை முன்னர் காத்தான்குடி வைத்தியசாலையாக இருந்து பின்னர் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையாக மாற்றப்பட்டதாகும்.
இதே வேளை, அங்கு மருந்து கொடுக்கும் கவுண்டரில் இருக்கும் ஊழிரிடம் நாம் இது தொடர்பான உண்மையை அறியச் சென்ற போது ஒரு நோயாளிக்கு அமொக்ஸிலின் மாத்திரையை கொடுத்து விட்டு அது வைக்கப்பட்டிருந்த டப்பாவில் இருந்த மாத்திரைகளில் அரைவாசியை ஒரு பேப்பரில் எடுத்து தனது பக்கெட்டில் வைத்துக் கொண்டதையும் அவதானிக்க முடிந்தது.
No comments:
Post a Comment