ஜனாதிபதி மஹிந்த வை ஆதரித்து அம்பாறையில் பேரணிகளும், பொது வேலைத்திட்டங்களும்.
ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து நேற்று அம்பாறை மாவட்டம் வீரமுனை, சொறிக்கல்முனை, அன்னமலைப் பிரதேசங்களில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு ஆதரவு தெரிவித்து பேரணிகள் இடம்பெற்றது. சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சம்பாந்துறைத் தொகுதி அமைப்பாளர் கே.மகேந்திரன் தலைமையில் இடம்பெற்ற இப்பேரணியில் கலந்து கொண்ட மக்கள் ஜனாதிபதி மற்றும் ஜனாதிபதியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் இனியபாரதி ஆகியோரது உருவப்படங்களுடனான பனர்களை தாங்கிச் சென்றனர்.
அத்துடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பதவியேற்று நான்கு ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் சமுர்த்தி பிரிவினால் விசேட நிகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் வறிய மக்களுக்கான வீடுகள், மீன்பிடி உபகரணங்கள், பயிர் விதைகள் என்பன வழங்கப்பட்டது.
பிரதேச செயலாளர் எஸ்.அழகரெத்தினம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்டத்திற்கான ஜனாதிபதியின் இணைப்பாளர் கு.இனியபாரதி கலந்து கொண்டு சிறப்பித்தார்.
திருக்கோவில் நிருபர்
0 comments :
Post a Comment