Monday, November 30, 2009

கனடாவில் சீக்கியர் ஒருவரே சீமானை விசாரித்தாராம்.

கைதுக்கு இந்திய, இலங்கை அதிகரிகளே காரணம் என்கின்றார்
மனித உரிமைகளுக்குப் பேர்போன கனடா ஒரு சீக்கியரை வைத்து, கைகளில் விலங்கு போட்டு அழைத்து சென்று தன்னை அவமானப்படுத்தியதாக சீமான் சென்னையில் தெரிவித்தார். கனடாவில் அந்நாட்டு அதிகாரிகள் தன்னை கைவிலங்கிட்டு துன்புறுத்தியதாக இயக்குனர் சீமான் புகார் தெரிவி‌த்தார்.

செ‌ன்னை‌யி‌ல் செ‌ய்‌தியாள‌‌ர்க‌ளிட‌ம் பே‌சியபோது இதனை தெ‌ரி‌வி‌த்த அவ‌ர், தன்னுடைய கைகளில் விலங்கிட்டு சுமார் 100 கிலோ மீட்டர் தூரத்திற்கு காரில் அழைத்துச்சென்று பல மணி நேரம் தன்னிடம் கனடா அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக கூ‌றினா‌ர்.

புலிகள் ஆதரவு பேச்சுக்காக இந்தியாவில் எத்தனை வழக்குகளை எதிர்கொண்டதாக தன்னை அந்த அதிகாரிகள் கேட்டதாகவும் சீமான் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

என்னை கைது செய்த கனடா அதிகாரிகள் இன்டர்போல் காவல‌ர்க‌ள் விசாரிப்பார்கள் என்று தெரிவித்தனர். அதன் பிறகு ஒரு சீக்கிய அதிகாரி வந்து என்னிடம் 2 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினார். ஆனால் கடைசி வரை அவர் தன்னை யார் என்றே என்னிடம் அறிமுகப்படுத்திக் கொள்ளவில்லை.

கனடாவில் இருந்து தான் திருப்பி அனுப்பப்பட்டதற்கு இந்திய அதிகாரிகளும், சிங்கள அதிகாரிகளும் தான் காரணம் என்றும் சீமான் குற்ற‌ம்சா‌ற்‌றினார்.

No comments:

Post a Comment