ஜெனரல் அரசின் சகல பொறுப்புக்களில் இருந்தும் இராஜனாமா செய்யலாம்!
முப்படைகளின் பிரதான அதிகாரி ஜெனரல் சரத் பொன்சேகா அரசில் தான் வகிக்கும் சகல பதவிகளையும் இராஜனாமா செய்ய திட்டமிட்டுள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளது. இதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை அவர் மிக விரைவில் மேற்கொள்வார் எனவும் அவ்வாட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
கடந்த காலங்களில் ஜெனரல் பொன்சேகா விற்கும் அரசிற்கும் இடையிலான முரண்பாடு வலுப்பெற்றுள்ளதாக பல ஊடகங்களும் தெரிவித்துவந்த போதிலும் அச் செய்திகளை ஊர்ஜிதப்படுத்தக் கூடிய வகையில் இருதரப்பில் இருந்தும் எவ்வித கருத்துக்களும் வெளியாக வில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
ஆனால் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அமெரிக்கா சென்றிருந்த ஜெனரல் பொன்சேகா அங்குள்ள பௌத்த விகாரை ஒன்றில் இடம்பெற்ற விசேட நிகழ்வில் பேசும்போது, நாடு தவறான பாதைக்கு செல்லுமாக இருந்தால் சீருடையை கழற்றி வைத்து விட்டு மக்களோடு இணைந்து நாட்டை சரியான பாதைக்கு கொண்டு செல்லவேண்டய தேவை தனக்கு இருப்பதாகவும், அதைச் செய்வதற்கு தான் எந்த சந்தர்ப்பத்திலும் தயங்கப்போவதில்லை எனவும் தெரிவித்திருந்தார். மேற்படி அவரது கருத்தானது அவர் அரசியில் நுழைவார் என்ற ஊகத்தை ஊர்ஜிதப்படுத்துவதாக அமைந்திருந்தது.
0 comments :
Post a Comment