றுபெல்லா ஊசி மருந்தேற்றப்பட்டபோது குருநாகல் வைத்தியசாலையில் கடந்த 12ம் திகதி ஒக்டோபர் மாதம் உயிரிழந்த 13 வயது சிறுமி அசந்தி வசனா வின் மரணத்திற்கு வைத்தியசாலை அதிகாரிகள், ஊழியர்களே பொறுப்பு என சுகாதார அமைச்சர் நிமால் சிறிபால டீ சில்வா தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து பேசுகையில் இது தொடர்பாக விசேட பரிசோதனை நாடாத்திய வைத்திய அதிகாரியின் தகவல்படி, வைத்தியர்கள் மற்றும் ஊழியர்களின் கவலையீனம் காரணமாகவே இம் மரணம் நிகழ்ந்துள்ளதாகவும், அவர்கள் உரிய முறையில் செயற்பட்டிருந்தால் மரணத்தை தவிர்த்திருக்க முடியும் எனவும் தெரியவந்துள்ளது. எனவே இச்சம்பவத்தில் சம்பந்தப்பட்டுள்ள அதிகாரிகள் அனைவரும் சேவையில் இருந்து நீக்கப்படுவர் எனவும் உயிரிழந்த குழந்தையின் குடும்பத்தின் நலன்களில் கவனம் செலுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக ஜேவிபி பாராளுமன்ற உறுப்பினர்கள் மன்றில் பலத்த கேள்விகளை எழுப்பியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
No comments:
Post a Comment