கருணாவிற்கு அமைச்சுப் பதவி பலவந்தமாக பிடிக்கப்பட்டவர்களுக்கு சிறைவாசமா? மாணவர் ஒன்றியம்
பேராதெனிய பல்கலைக் கழகத்தில் கலைப்பிரிவின் இரண்டாம் ஆண்டில் பயின்றுவந்த மாணவி ஒருவர் கடந்த 12ம் திகதி பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் சந்தேகத்தின் பெயரில் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ளார். கிளிநொச்சியை சேர்ந்த துஸ்யந்தி எனப்படும் மாணவியின் கைது தொடர்பாக பல்கலைக் கழக மாணவர்கள் தமது எதிர்ப்புக்களை தெரிவித்து வருகின்றனர். அதே நேரம் குறிப்பிட்ட கைதையும் புலிகளியக்கத்தின் கடந்த கால நிகழ்வுகளையும் விபரமாக எடுத்தியம்பி பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் ஊடகங்களுக்கு அறிக்கை ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். அவ் அறிக்கையில் குறிப்பிட்ட மாணவி புலிகளுக்கு உதவி புரிந்திருந்தாலும் கூட அவள் பயத்தின் நிமிர்த்தமே அவ்வாறு செய்திருப்பாள், புலிகள் இயக்கம் அவ்வாறானதொரு கொடிய இயக்கம் எனவே இவ்வாறு மாணவர்களை தவறான பாதைக்கு அழைத்துச் சென்ற புலிகளின் முக்கியஸ்த்தர் அரச பாதுகாப்பில் இருக்கும் போது குற்றங்களுக்காக நிர்பந்திக்கப்பட்ட மனிதர்களை அரசு தண்டிக்க முடியாது என அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டள்ளதாவது.
எதிர்வரும் காலங்களில் எல்ரிரிஈ யோடு சேர்ந்து செயற்பட்டவர்களைக் கைது செய்வதாயிருந்தால் முதலில் கைது செய்யப்பட வேண்டியவர் கருணா . ஏன்? LTTE யின் கிழக்குப் பிராந்திய ஆயுதப் பிரிவின் தலைவராக இருந்தவர் கருணா. ஆயிரமாயிரம் அப்பாவி மக்களைக் கொன்று குவித்த கொலைகாரன் தான் கருணா. 700 போலீஸாரை ஒரேயடியாகக் கொலைப் செய்த பாதகன் இன்று அவர் அரசாங்கத்தின் கழிவறையை சுத்தம் செய்யும் பொறுப்பை ஏற்றுக் கொண்டதால் சுகமாக இருக்கிறார். குற்றங்கள் இல்லை. வழக்குகள் இல்லை. சுதந்திரக் கட்சியின் உயர்மட்ட பதவியில் இருக்கிறார். அமைச்சுப் பதவியின் வரப்பிரசாதங்களையும், வருமானங்களையும் பெறுகிறார் முன்னால் இராணுவத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு கிடைப்பதைவிட கூடுதலான பாதுகாப்பு கிடைக்கிறது. தனி பாதுகாப்பு பிரிவொன்றே இருக்கிறது.
ஆனாலும், கருணா போன்றவர்களால் பலவந்தமாக LTTE க்கு சேர்க்கப்பட்டு, துப்பாக்கி முனையில் சயனைட்குப்பி கழுத்தில் தொங்க விடப்பட்ட துவாரகா போன்றவர்கள் இன்று சிறை கூடத்தில். குடும்பத்தில் ஒருவர் கட்டாயமாக LTTE ல் சேரவேண்டுமென்று கருணா க்கள் தான் ஆணையிட்டார்கள். சேராவிட்டால் குடும்பத்தோடு கைலாசம் அனுப்பியவர்களும் அவர்கள் தான். தாய் தந்தையரின் கதறலுக்கும் கெஞ்சலுக்கும் மத்தியில் கூந்தலை பிடித்து இழுத்துச் சென்று LTTE வதை முகாம்களுக்குள் தள்ளியவர்களும் கருணா க்கள் தான். அரச பாதுகாப்புப் படைகள் சந்தேகப்படாத வண்ணம், அவர்களை கர்ப்பிணிகளாக்கி வயிற்றுக்கடியில் குண்டைக் கட்டி தெற்கின் இலக்குகளை நோக்கி அனுப்பியவர்களும் இவர்களே.
அப்படியான கருணா அம்மான்கள் இன்று மஹிந்தரின் மடியில் அமைச்சர்களாக இருக்கின்றனர். LTTE ல் சேர்ந்த தமிழ் யுவதிகள் சிறைக்கூடங்களில். இதிலிருக்கும் நியாயம் என்னவென்பதை உங்களிடம் கேட்கிறோம். இப்போதிருக்கும் பிரச்சினை என்னவென்றால், துவாரகா போன்றவர்களை சிறைக்கூடங்களுக்குள் அடைத்துவைப்பது மாத்திரமல்ல, 30 வருடகாலமாக எமது நாட்டை அச்சுறுத்திய தேசியப் பிரச்சினைக்கு உண்மையான தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்குப் பதிலாக அரசாங்கம் அதிபயங்கர பாதையில் பயணிப்பது தான எனவும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment