சரத் பொன்சேகா இராஜனாமா கடிதத்தை தந்தால் ஏற்றுக்கொள்வேன். ஜனாதிபதி
ஜெனரல் சரத் பொன்சேகா தனது இராஜனாமா கடிதத்தை தந்தால் அதை அரை மணிநேரத்தில் அங்கீகரிப்பதற்கு தான் தயாராக உள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அத்துடன் எவரதும் ஜனநாயக உரிமைகளை மறுப்பதற்கு தயாராக தான் இல்லை என தெரிவித்துள்ள அவர் அரசியல் ரீதியாக எந்த சாவாலையும் எதிர்கொள்ள தான் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் நேற்று இடம்பெற்ற தொலைக்காட்சி நிகழ்வொன்றில் முன்னாள் இராணுவத்தளபதி தொடர்பாக அவரிடம் கேட்க்கப்பட்டபோது எவ்வித பதிலையும் கொடுக்க மறுத்த ஜனாதிபதி, சரத்பொன்சேகாவை இலங்கை இராணுவத்தின் ஓர் உயர் அதிகாரியாகவே தனக்கு தெரியும் எனவும் தெரிவித்திருந்தார்.
இலங்கை சட்டத்தின் அடிப்படையில் இராஜனாமா கடிதம் வழங்கப்பட்டாலும் அதை நாட்டின் ஜனாதிபதி ஏற்றுக்கொண்டு அங்கீகாரம் வழங்கினாலேயே ஒருவரால் சேவையில் இருந்து விலக முடியும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும்; கடந்த மாதம் பாதுகாப்புச் செயலரை தொடர்பு கொண்டிருந்த ஜெனரல் சரத் பொன்சேகா தனக்கு பதவி நீடிப்பு ஒன்று அவசியம் இல்லை என தெரிவித்திருந்தாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
0 comments :
Post a Comment