Thursday, November 26, 2009

ஹெல உறுமயவினுள் பிளவு. கட்சி இரண்டாக பிரியும் அபாயம்.

பௌத்த துறவிகள் தலைமை தாங்குகின்ற ஜாதிக்க ஹெல உறுமய கட்சியினுள் பிளவுகள் ஏற்பட்டுள்ளதாகவும் கட்சி இரண்டாக பிரியும் வாய்ப்புள்ளதாகவும் தெரியவந்துள்ளது. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளரும் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்சவை ஆதரிப்பதா அன்றில் எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரிப்பதா என்ற விடயத்தில் ஏற்பட்ட கட்சியினுள் பிளவு ஏற்பட்டுள்ளது.

தேரர் அக்மீமன தயாரத்தின தலைமையிலான குழுவொன்று ஜனாதிபதி மஹந்தவை எதிர்பதென்ற முடிவுக்கு வந்துள்ளதாகவும், பிறிதொரு குழு ஜனாதிபதியை ஆதரிப்பதென்ற முடிவில் உள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com