திருமணம் மற்றும் விவாகரத்து தொடர்பான சட்டத்தில் திருத்தம் செய்ய மலேசிய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள திருமண மற்றும் விவாகரத்து சட்டம், சிவில் நீதிமன்றங்களில் இஸ்லாமியர்கள் அல்லாத பிற சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே கட்டுப்படுத்துவதாக உள்ளது.
இஸ்லாமிய மதத்திற்கு மாறியவர்கள் விவகாரத்து கோரினால், அவரது மனைவி அல்லது கணவன்மார்கள் விவாகரத்து மனு தாக்கல் செய்ய மறுத்துவிடுகிறார்கள்.
இந்நிலையில் புதிதாக கொண்டு வரப்பட உள்ள சட்டதிருத்தம் மூலம் இஸ்லாமிய மதத்திற்கு மாறியவர்கள், விவகாரத்து கோரி மனு தாக்கல் செய்தால், எதிர்தரப்பு கணவன் அல்லது மனைவி பதில் மனு தாக்கல் செய்தே ஆக வேண்டும்.
அவ்வாறு விவகாரத்து மனு தாக்கல் செய்தால்,மதம் மாறிய மூன்று மாதம் கழித்து அவர்கள் செய்த சிவில் திருமணம் ரத்து செய்யப்பட்டு விவகாரத்து வழங்கப்பட்டு விடும்.
இதற்கான அதிகாரம் புதிய சட்டதிருத்தம் மூலம் சிவில் நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட உள்ளது.
அதேபோன்று மதம் மாறியவர் மறுமணம் செய்து கொள்வதற்கான அனுமதியை அளிக்கும் அதிகாரத்தை இஸ்லாமிய சட்டமான ஷரியத் நீதிமன்ற நீதிபதிக்கு வழங்கும் வகையில், இஸ்லாமிய குடும்ப சட்டத்திலும் திருத்தம் கொண்டு வரப்பட உள்ளதாக மலேசிய அரசு மூத்த வழக்கறிஞர் முகமத் நஸீர் திஸா தெரிவித்தார்.
No comments:
Post a Comment