எஸ்.எஸ்.பி வாஸ் குணவர்த்தன குருநாகல் பிரதேசத்திற்கு இடமாற்றும்.
கொழும்பில் உள்ள பிரபல தகவல் தொழில்நுட்பக் கல்லூரி மாணவன் நிபுண ராமநாயக்க கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக ஒழுக்காற்று நடவடிக்கையின் பொருட்டு பொலிஸ் தலைமையகத்திற்கு மாற்றப்பட்டிருந்த பொலிஸ் அத்தியட்சகர் வாஸ் குணவர்த்தன குருநாகல் பிரதேசத்திற்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதே நேரம் மேற்படி சம்பவம் தொடர்பாக விளக்க மறியலில் இருந்து பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள அவரது மகன் ரவி குணவர்த்தன ஊவா மாகாண முதலமைச்சர் சசீந்திர ராஜபக்சவின் புகைப்படம் ஒட்டிய கார் ஒன்றில் காரியாலயம் வந்திறங்கியதாக இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
0 comments :
Post a Comment