Tuesday, November 17, 2009

பிக்குகளை கொன்றொழித்த கருணாவிலும் பார்க்க ஜெனரலுக்கு குறைந்த பாதுகாப்பு. ஜேவிபி.

முப்படைகளின் பிரதான அதிகாரி பதவியில் இருந்து ஜெனரல் சரத் பொன்சேகா ஓய்வு பெற்றதை தொடர்ந்து சப்பிரதாய பூர்வமாக நாட்டின் ஜனாதிபதியும் முப்படைகளின் தளபதியுமான மஹிந்த ராஜபக்ச அவர்களை அலறி மாளிகையில் சந்தித்திருந்தார்.

இச்சந்திப்பின்போது தனது பாதுகாப்பு தொடர்பாக ஜெனரல் சரத் பொன்சேகா ஜனாதிபதியை வினவியபோது அதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படும் எனவும் அதிகமாக தேவையாக இருந்தால் எழுத்து மூலம் கோரிக்கை விடுக்கும் படியும் அதை பரிசீலினை செய்ய தாயாராகவுள்ளாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அத்துடன் ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு பொருத்தமான வதிவிடம் ஒன்றை அரசு தேர்ந்தெடுக்கும்வரை தற்போது வசித்துவரும் உத்தியோக வாசஸ்த்தலத்தில் தொடர்ந்தும் வாழ்வதற்கும் ஜனாதிபதி அனுமதி வழங்கியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜெனரல் சரத் பொன்சேகாவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதாக பல்வேறுபட்ட ஸ்தாபனங்களும் அரசை விமர்சித்து வருவதை அவதானிக்க முடிகின்றது. குறிப்பாக அறுந்தலாவவில் பௌத்த பிக்குகளை கொன்றழித்தது முதல் பல்வேறு பயங்கரவாக செய்பாடுகளை முன்னெடுத்துவந்த கருணாவிற்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பிலும் குறைவான பாதுகாப்பே ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு வழங்கப்பட்டுள்ளதாக ஜேவிபி சார்பு பத்திரிகைகள் குற்றஞ்சாட்டியுள்ளது.

எது எவ்வாறாயினும் நேற்று தனது கடமைகள் அனைத்தையும் முடித்துக் கொண்டு போரில் உயிரிழந்த தனது சகாக்களுக்கு அஞ்சலி செலுத்தச் சென்றிருந்த ஜெனரல் சரத் பொன்சேகாவிடம் பாதுகாப்பு தொடர்பாக ஊடகவியலாளர்கள் கேட்டபோது தற்சமயம் எவ்வித குறைபாடுகளும் இல்லை எனவும் தன்னைச் சுற்றியிருந்த படையினரைக்காட்டி நீங்கள் அவற்றை நேரில் காண்கின்றீர்கள்தானே என்றார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com