ஐ.நா சபையின் ஜோன் ஹோல்மஸ் நாளை மீண்டும் வருகின்றார்.
ஐ.நா சபையின் மனித உரிமை விவகாரங்கள் மற்றும் அத்தியாவசிய உதவிகளுக்கான இணைப்பாளர் திரு. ஜோன் ஹோல்ம்ஸ் 3 நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு நாளை இலங்கை வருகின்றார். நாளை இலங்கை வந்தடையும் அவர் வவுனியாவில் உள்ள இடைத்தங்கல் முகாம்களுக்குச் சென்று அங்குள்ள மக்களின் நிலைமைகளை பார்வையிட திட்டமிட்டுள்ளார்.
பின்னர் ஜனாதிபதி, பா.உ பசில் ராஜபக்ச, வெளிவிகார அமைச்சர் மற்றும் பிரசதான அமைச்சர்கள் சிலைரையும் சந்திக்கவுள்ளதாகவும் தெரியவருகின்றது.
இலங்கையில் யுத்தம் முடிவடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டவுடன் கடந்த மே மாதம், அதற்கு முன்னர் இவ்வருடத்தில் பெப்ரவரி மற்றும் ஏப்ரல் மாதங்களிலும் அவர் இலங்கை வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments :
Post a Comment