Tuesday, November 17, 2009

திருப்தி தெரிவிப்பதுடன் நின்று விடலாகாது

பல்லாயிரக்கணக்கானோர் வாழும் முகாம்களில் அடிப்படை வசதிகளை எதிர்பார்க்க முடி யாதெனினும் அவை திருப்திகரமாக உள்ளன என்று பாராளுமன்ற உறுப்பினர் என். ஸ்ரீகாந்தா
நிவாரணக் கிராமங்களிலுள்ள வசதிகளையிட்டும் மீள் குடியேற்றச் செயற்பாடுகளையிட்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்கள் திருப்தி தெரிவித்துள்ளனர் என்ற செய்தி நேற்றைய பத்திரி கைகளில் வெளியாகியிருந்தது.

தமிழ் தேசியக் கூட்ட மைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு வொன்று நேற்று முன்தினம் நிவாரணக் கிராமங்களுக்கும் மீள் குடியேற்றம் நடைபெற்ற பிரதேசங்களுக்கும் விஜயம் மேற் கொண்டது. இவர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று அரசாங்கம் இந்த விஜயத்துக்கான வசதிகளைச் செய்து கொடுத்தது.

தங்கள் விஜயத்தின் இறுதியில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்கள் மேற்படி அபிப்பிராயத்தைக் கூறியிருக்கின்றனர்.

இந்த உறுப்பினர்கள் சில மாதங்களுக்கு முன் நிவாரணக் கிராமங்கள் பற்றியும் மீள்குடியேற்றம் பற்றியும் கொண் டிருந்த அபிப்பிராயம் இப்போது இவர்கள் தெரிவித்த அபிப்பிராயத்திலிருந்து வேறு பட்டது. அரசாங்கத்தின் செயற்பாடு திருப்திகரமாக இல்லை என்பதே சில மாதங்களுக்கு முன் இப்பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளிப்படுத்திய அபிப்பிராயம்.

அது நிவாரணக் கிராமங்களுக்கும் மீள்குடியேற்றப் பிரதேசங்களுக்கும் விஜயம் செய்யாது தூர நின்று தெரிவித்த அபிப் பிராயம். இப்போதும் சில எதிரணித் தலைவர்கள் தூர நின்று அரசாங்கத்தை விமர்சிக்கும் கருத்துகளை வெளி யிடுகின்றார்கள்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்புப் பாரா ளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்த கருத்து தூர நின்று விமர்சிக்கும் தலைவர்களின் கண்களைத் திறக்குமென நம்புகின்றோம்.

இடம்பெயர்ந்த மக்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதில் இலங்கை பல வளர்ச்சியடைந்த நாடுகளிலும் பார்க்கக் கூடுதலான திறமையுடனும் கருத்தீடு பாட்டுடனும் செயற்பட்டிருக்கின்றது. அமெரிக்காவில் இடம்பெயர்ந்த மக்கள் பல வருடங்களாகக் கூடாரங்களில் வாழ்கின்றார்கள் என்பதை இங்கு சுட்டிக் காட்டலாம்.

பல்லாயிரக்கணக்கானோர் வாழும் முகாம்களில் அடிப்படை வசதிகளை எதிர்பார்க்க முடி யாதெனினும் அவை திருப்திகரமாக உள்ளன என்று பாராளுமன்ற உறுப்பினர் என். ஸ்ரீகாந்தா கூறியிருப்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.

நிவாரணக் கிராம வசதிகளிலும் மீள்குடியேற்றத்திலும் திருப்தி தெரிவிப்பதுடன் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்புத் தலைவர்கள் நின்று விடக்கூடாது. தமிழ் மக்களின் பிரச்சினை மீள்குடியேற்றத்துடன் முடிந்து விடாது. இனப் பிரச்சினைக்கு நியாயமான தீர்வொன்று கிடைக்கும் வரை தமிழ் மக்களின் பிரச்சினை தொடரவே செய்யும். இனப் பிரச்சினையின் தீர்வுக்கு ஆக்க பூர்வமான முறையில் செயற்படுவதற்கு இப்போது கூட்டமைப்பின் தலைவர்கள் தயாராக வேண்டும்.

சமகால யதார்த்தத்துக்கு அமைவான அணுகுமுறையைப் பின்பற்று வதன் மூலமே தீர்வை அணுகிச் செல்ல முடியும். கடந்த காலங்களில் பின்பற்றிய அணுகு முறைகள் பலனளிக்காததற்கான காரணம் பற்றிக் கூட்டமைப்புத் தலைவர்கள் நிதானமாகச் சிந்தித்து முடிவெடுக்க வேண்டியது அவசியத் தேவையாக உள்ளது.

இனப் பிரச்சினைக்கான தீர்வு முயற்சியை முன்னெடுக்கும் அதேவேளை தமிழ் மக்கள் பாதிப்புகளுக்கு உள்ளாகாதிருப்பதையும் உறுதிப்படுத்தும் தார்மீகக் கடப்பாடு தமிழ்த் தலைவர்களுக்கு உண்டு. கடந்த காலங்களில் இத்தலைவர்கள் தீர்வுக்காகப் பின் பற்றிய அணுகுமுறை தமிழ் மக்களின் உயிரிழப்புக்கும் சொத்தழிவுக்கும் காரணமாகியிருப்பதை நாம் மறக்கலாகாது.

முழு மையான தீர்வை உடனடியாகப் பெறுவது சாத்தியமற்றதான இன்றைய நிலையில் மக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் படிப் படியாகத் தீர்வை நோக்கிச் செல்லும் அணுகுமுறையே பொருத்தமானது.


No comments:

Post a Comment