தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமை இலங்கையில் அழிக்கப்பட்டதை தொடர்ந்து புலம்பெயர் தேசங்களிலே புலிகளின் சொத்துக்களுக்கும் பணத்திற்கும் பொறுப்பாக இருந்தவர்கள் பலர் அச்சொத்துக்களையும் பணத்தையும் தமது உடைமைகளாக்கிக் கொண்டுள்ளனர். சிலர் தலைமைறைவாகி உள்ளனர்.
ஈழப் போராட்டத்திற்கென புலம் பெயர்ந்து வாழுகின்ற தமிழ் மக்கள் பலரிடம் கடனடிப்படையில் பல கோடிக்கணக்கான பணத்தை புலிகள் பெற்றுக்கொண்டுள்ளனர். இப்பணமானது வட்டியுடன் அம்மக்களுக்கு திருப்பி தரப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் இவ்வாறு புலிகளுக்கு பணம் செலுத்திய அன்பர் ஒருவர் தான் பணத்தை வழங்கிய சுவிற்சர்லாந்த நாட்டில் வாழும் புலிகளின் நிதி வசூலிப்பாளர் ஒருவரை அணுகி பணத்தை திருப்பி தருமாறு கேட்டபோது, பணம் கொத்துரொட்டி விற்றுத் தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓரு லட்சம் சுவிஸ் பிராங்குகளை வங்கியில் கடனாக எடுத்து புலிகளுக்கு கொடுத்து விட்டு அப்பணத்திற்கு வட்டியும் செலுத்திக்கொண்டிருக்கும் நபர், கொத்துரொட்டி விற்று எனது பணம் திருப்பி தரப்படுமா? அது எப்போது எனக் கேட்டபோது வெகு நாட்கள் செல்லாது என பதிலளித்த வசூலிப்பாளர், தாம் இம்முறை மாவீரர் தினத்தை நாடாத்துவது கொத்துரொட்டி விற்பதற்காகவே எனவும் அங்கு பெரும்தொகையான மக்கள் வரும்போது அவர்களுக்கு கொத்துரொட்டிகளை விற்று உங்களில் சிலரது கடனை திருப்பித்தரலாம் என உத்தேசித்திருக்கின்றோம் எனக் கூறியுள்ளார். அத்துடன் உங்கள் பணம் வேண்டுமானால் முடிந்தவரை மக்களை மாவிரர் தின நிகழ்வுகளுக்கு அழைத்துவாருங்கள் அவ்போது அங்கு அதிகம் வியாபாரம் இடம்பெறும் எனவும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment