புலிகள் சார்பு புதிய அரசு : இலங்கை கடும் எச்சரிக்கை
"வெளிநாடுகளில் இருந்து செயல்படும் வகையிலான ஒரு அரசை அமைப்பதற்கான நடவடிக்கைகளில் புலிகளும், அவர்களது ஆதரவு அமைப்புகளும் ஈடுபட்டு வருகின்றனர். சர்வதேச நாடுகள் இதை அனுமதிக்கக் கூடாது" என, இலங்கை தெரிவித்துள்ளது.
இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ரோகிதா பொகலகாமா கூறியதாக, இலங்கை அரசால் நடத்தப்படும் பத்திரிகையில் வெளியாகியுள்ள செய்தி:இலங்கையில் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப் பட்டுள்ளனர். இதனால், வெளிநாடுகளில் தங்கியுள்ள புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களும், அவர்களின் ஆதரவு அமைப்புகளும், இலங்கைக்கு வெளியில் இருந்து செயல்படக் கூடிய ஒரு அரசை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கை களில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கான பிரதிநிதிகளை தேர்வு செய்வதற்காக அடுத்த ஆண்டு ஏப்ரலில் தேர்தல் நடத்தப் போவதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.அமெரிக்காவில் இருந்து செயல்படும் விஸ்வநாதன் ருத்ரகுமாரன் இதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார். வேறு ஒரு பெயரை வைத்துக் கொண்டு, அதன்மூலம் புலிகளின் பயங்கரவாத செயல்களை அவர்கள் தொடர்ந்தால், அதை நாங்கள் முறியடிப்போம். புலிகள் ஆதரவு அமைப்புகளின் இந்த பிரிவி னைவாத முயற்சியை சர்வதேச நாடுகள் அனுமதிக்கக் கூடாது.இவ்வாறு அந்த பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி தினமலர்
0 comments :
Post a Comment