இலங்கை தேசத்தின் நட்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும்வண்ணம் வெளிநாடுகளில் சட்டவிரோதமாக குடியேறி அங்கு சரியான சட்ட அங்கிகாரம் இல்லாத வகையில் தங்கியிருக்கும் அனைவரும் இலங்கைக்கு சட்டரீதியாக அழைத்துவரப்படுவர் என இலங்கையின் வெளிவிபகார அமைச்சர் ரோஹித போகல்லாகம தெரிவித்தார்.
இவ்வாறு பல இலட்சம்பேர் நமது நாட்டின் நட்பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் வண்ணம் வெளிநாடுகளில் தங்கியிருக்கின்றனர் இவர்களுக்கு சரியான சட்ட அந்தஸ்து வழங்கப்படாமல் (அகதிகளாக) இருப்பதால், இலங்கையில் இப்போது சாதாரணநிலைக்கு திரும்பிவிட்டதாலும் இவர்கள் அனைவரும் அழைத்துவரப்படுவதற்கு சட்டப்படியான ஏற்பாடுகள் நடந்துவருவதாக தெரிவித்த அவர் இதில் விடுதலைப் புலிகளுக்கா செயற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு சட்ட விசாரணைகளுக்கு உள்ளாவர் எனவும் தெரிவித்தார்.
இம்முயற்சியின் முதல் கட்டமாக கனடா, இந்துநேசியா, அவுஸ்ரேலியாவில் தங்கியிருப்பவர்கள் மீது அரசு அடுத்தகட்ட நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதாகத் தெரிகிறது. சர்வதேச சட்டங்களின்படி அகதிகளாக வேறு நாடுகளில் தங்கியிருப்போர் தத்தம்நாடுகளில் பிரச்சினை இல்லையென ஐ.நா அறிவிக்கும் பட்சத்தில் அந்தந்த நாடுகளுக்கு திரும்பிச் செல்ல வேண்டும் என்பது விதியாகும்.
சட்டவிரோத குடியேற்றக்காரர்களாக தற்போது இலங்கையர்கள் கனடாவில் 36 பேரும் இந்துநேசியாவில் 330 பேரும் அவுஸ்ரேலியாவில் 1100 பேரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment