ஆயுதக் கொள்வனவுகளில் மோசடி : விசாரணை மேற்கொள்ள முடிவு.
Hicorp எனப்படும் நிறுவனத்தினூடாக இலங்கை இராணுவத்தினருக்கு பெருந்தொகையான ஆயுதங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. யுத்தம் முடிவடைந்து அரச தலைவர் மஹிந்த ராஜபக்சவிற்கும் முன்னாள் இராணுவத் தளபதிக்கும் இடையில் ஜனாதிபதி போட்டி உருவாகியுள்ள நிலையில் சரத் பொன்சேகாவின் மருமகனது நிறுவனத்தினூடாக மேற்கொள்ளப்பட்டுள்ள கொள்ளவனவுகளின் முறைகேடுகள், மோசடிகள் இடம்பெற்றுள்ளனவா என விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. குறிப்பிட்ட நிறுவனமானது ஜெனரல் சரத் பொன்சேகாவின் மருமகன் தனுன திலகரத்தினவின் பெயரில் அமெரிக்க Oklohama நகரில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
அதே நேரம் இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக டெய்லி மிரர் பத்திரிகையில் Hot Seat நிகழ்ச்சியில் ஜெனரல் சரத் பொன்சேகாவிடம் கேட்கப்பட்டபோது, இராணுவத்துக்கு தேவையான ஆயுதங்கள், தோட்டாக்கள் மற்றும் இராணுவ உபகரணங்கள் யாவும் பாதுகாப்புச் செயலர் கோத்தாபாய ராஜபக்சவின் அனுமதியுடன் லங்கா லொஜிஸ்ரிக் எனும் நிறுவனத்தினூடாகவே கொள்வனவு செய்யப்பட்டதாகவும் குறிப்பிட்ட கம்பனியின் தலைவர் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவே எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment