பொது வேட்பாளர் யார் என்பது வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்படும். மனோ கணேசன்.
ஜேவிபி பூரண ஆதரவு வழங்கும் அனுரகுமார திஸாநாயக
புதிதாக உருவாக்கப்பட்ட ஐக்கிய தேசியக் கூட்டணி எனும் எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பின் சார்பாக எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத்பொன்சேகா பொது வேட்பாளராக நியமிக்கப்படலாம் என முன்னணி வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஜனநாயக மக்கள் முன்னணி எனும் கட்சியின் தலைவர் மனோகணேசன் பொது வேட்பாளர் யார் என்பது தொடர்பாக எதிர்வரும் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார். எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக ஜெனரல் பொன்சேகா நியமிக்கப்பட்டால் அதை தாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை எனவும், கூட்டில் இருந்து வெளியேறப்போவதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்திருந்தார். ஜெனரல் பொன்சேகாவிற்கு நெருக்கமான வட்டாரத்தினருக்கும் மனோகணேசனுக்கும் இடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளை அடுத்து ஜெனரலை ஆதரிப்பதற்கு மனோகணேசன் இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரியவருகின்றது.
அதே நேரம் எதிர்கட்சிளின் பொது வேட்பாளராக அரசியல் கட்சி ஒன்றின் உறுப்பினர் இல்லாத ஒருவர் தேர்தலில் நிறுத்தப்படும்போது எதிர்கட்சிகளின் கூட்டு முன்னணிக்கு பூரண ஆதரவு வழங்க ஜேவிபி தயாராக இருப்பதாக ஜேவிபியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுத் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment