ஜனாதிபதி தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர்கள் அனைவரையும் இன்று அலறி மாளிகையில் அவசரமாக சந்தித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச எதிர்வரும் வருட ஆரம்பத்தில் ஜனாதிபதி தேர்தலை நாடாத்த திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
அதே நேரம் ஜனாதிபதி தேர்தலுக்கான வர்த்தமானி அறிவித்தலுக்கு ஜனாதிபதி கையொப்பம் இட்டுள்ளதாக மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச சற்று முன்னர் அததெரண விற்கு தெரிவித்துள்ளார். தேர்தல் திகதி தொடர்பாக தேர்தல்கள் ஆணையாளர் நளை உத்தியோக பூர்வமாக அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
0 comments :
Post a Comment