ஜெனரல் சரத் பொன்சேகாவின் புதிய அரசியல் அலுவலகத்தில் ஐ.தே.க யுடன் கலந்துரையாடல்.
மனோ கணேசனுடனும் கலந்துரையாடல் : சிறுபாண்மையினரது உரிமைகள் உறுதிப்படுத்தப்படுமாம்.
கொழும்பு றோயல் கல்லூரிக்கு அருகாமையில் தனது அரசியல் அலுவலகத்தை நிறுவியுள்ள ஜெனரல் சரத் பொன்சேகா நேற்று பிற்பகல் தனது புதிய அலுவலகத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அங்கு இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஜனாதிபதி தேர்தலில் சரத் பொன்சேகாவிற்கு ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவு வழங்குவதற்கான பின்னணி மற்றும் நிபந்தனைகள் தொடர்பாக பேசப்பட்டதாக நம்பகமாக தெரியவருகின்றது. அதேநேரம் இன்று அல்லது நாளை ஐக்கிய தேசியக் கட்சி தனது நிலைப்பாட்டை உத்தியோக பூர்வமாக தெரியப்படுத்தும் எனவும் நம்பப்படுகின்றது.
அதே நேரம் நேற்று பிற்பகல் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனைச் சந்தித்து பேசிய ஜெனரல் சரத் பொன்சேகா, தான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் இலங்கையில் சிறுபாண்மை இன மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதாக தெரிவித்தாகவும் மனோ கணேசனுக்கு நெருங்கிய வாட்டாரங்கள் தெரிவித்துள்ளது. அதே நேரம் அவர்கள் இருவருக்கும் இடையில் சில வேறு விடயங்களிலும் இணக்கப்பாடு காணவேண்டியுள்ளதாகவும் அவ்வாட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment