தம்புள்ள பிரதேசத்தில் நிறுவப்பட்டுள்ள வர்த்தக வலயத்தை ஒத்த வர்த்தக வலயம் ஒன்று யாழ்பாணத்தில் இலங்கை வங்கியின் நிதிஉதவியுடன் நிறுவப்படவுள்ளது. இதற்கான பூர்வாங்க செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வங்கி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
யுத்தம் முடிவடைந்ததை தொடர்ந்து இலங்கை வங்கி பல்வேறுபட்ட சேவைகளை வடகிழக்கில் மக்களுக்கு வழங்கி வருகின்றது. இடைத்தங்கல் முகாம்களில் தனது கிளைகளை நிறுவியதுடன் அங்கு தங்கியுள்ள வாடிக்கையாளர்களுக்கான சேவையாக மும்மொழிகளிலும் தகவல்களை வழங்கக்கூடிய தொலைபேசிசேவை ஒன்றை ஒழுங்கு செய்திருந்தது. இதன்மூலம் வெளிநாடுகிளில் வாழ்ந்த பல உறவுகள் பயனடைந்ததாக கூறப்படுகின்றது.
அதே நேரம் சுயதொழில் வாய்புக்களுக்காக 6 கோடி ரூபாவை குறைந்த வட்டியுடன் இலகு கடன்களை வழங்கியுள்ளது.
No comments:
Post a Comment