Saturday, November 28, 2009

முருங்கையில் மீளவும் வேதாளம்

கடந்த 03.11.2009ம் திகதி ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான பல் கட்சிக் கூட்டணியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ¤ம் இணைந்து ஒப்பமிட்டு வெற்றிக் களிப்பில் இருப்பது அக்கட்சியின் ஆதரவாளர்களை எங்கு கொண்டு சேர்க்குமோ இறைவன்தான் அறிவான்.

றைந்த மாமனிதர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மர்ஹ¤ம் அஷ்ரஃப் ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக இருக்கும் வரை அக்கட்சியுடன் கூட்டே கிடையாது என்றார். ஆனால் இன்றைய முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவமோ ரணிலிடம் மண்டியிட்டுக் கொண்டிருக்கின்றது.

‘பொன்னான கத்தி என்பதற்காக பொக்கிளை குத்தி சாகலாமா’ என்பது முதியோர் கூற்று. அதே போன்றே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பதற்காக தங்களுடைய எதிர்காலத்தை முஸ்லிம்கள் குழிதோண்டி புதைக்கலாமா? என்ற கேள்வி புத்திஜீவிகளிடத்தில் ஏழாமல் இல்லை. கட்சி என்பது காலத்தின் தேவை. இனவாதம் பேசி மக்களை முட்டாள்களாக்குவது வங்குரோத்து அரசியல்வாதிகளின் கைவந்த கலையாகிவிட்டது. தொடர்ந்து இவ்வாறு செய்வதால் மக்கள் மட்டும் ஏமாறவில்லை மக்களை ஏமாற்றுபவர்களும் ஏமாறத்தான் போகிறார்கள். மர்ஹ¥ம் அஷ்ரஃப் அவர்கள் பிரியாவிடை சொன்ன கட்சியை வைத்துக் கொண்டு அரசியல் நடத்தும் முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவத்தின் தீர்க்கதரிசனமற்ற செயற்பாட்டால் அமைச்சர் அதாஉல்லாவில் தொடங்கி அமைச்சர்களான றிசாட் பதியுதீன், நஜீம் ஏ. மஜீத், அமீர் அலி, பிரதி அமைச்சர்களான ஹ¤சைன் பைலா, நிஜாமுத்தீன், பாயிஸ் ஆகியோரும் அவர்களின் ஆயிரக் கணக்கான ஆதரவாளர்களும் முஸ்லிம் காங்கிரஸை விட்டு ஓடியே போய்விட்டனர்.

இவ்வாறு சென்றவர்கள் பல அரசியல் கட்சிகளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ¤க்கு எதிராக உருவாக்கியும் விட்டனர். இதற்கு முக்கிய காரணம் இன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை சுற்றியிருப்பவர்கள் அன்று ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து கொண்டு முஸ்லிம் காங்கிரஸை அழிக்க முற்பட்டவர்கள் என்பது உண்மையிலும் உண்மை. அதனால்தான் முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவம் ரணிலுடன் தொடர்ந்து ஒட்டிக் கொண்டிருக்கின்றது- இதனால் பேரம் பேசும் சக்தியை இழந்து கட்சி ரணிலிடம் சோரம் போய்விட்டதோ என மக்கள் விசனப்படுவதிலும் நியாயம் இருக்கத்தான் செய்கிறது-

மர்ஹம் அஷ்ரஃப் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணிலை வெறுத்ததில் பல காரணங்கள் உள்ளன. அதில் முக்கியமானது 1996ஆம் ஆண்டு நாட்டில் பயங்கரவாதத்தை இல்லாமல் செய்ய அன்றைய பொதுசன ஐக்கிய முன்னணி தீர்வுப் பொதியொன்றை தயாரித்து அரசின் சார்பாக அமைச்சர் அஷ்ரஃப் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றிக் கொண்டிருந்த போது ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அதன் பிரதிகளை பாராளுமன்றத்திற்குள்ளேயே தீயிட்டு எரித்தபோது அப்போதைய எதிர்க் கட்சித் தலைவர் ரணில் தனது இரண்டு கைகளையும் முகத்தில் புதைத்துக் கொண்டு மெளனியாக இருந்தார்.

இச்செயல் மர்ஹ¤ம் அஷ்ரஃப் அவர்களை மட்டும் அவமானப்படுத்தவில்லை. இலங்கையில் உள்ள அனைத்து முஸ்லிம்களையும் அவமானப்படுத்தியது. 1989ஆம் ஆண்டு அஷ்ரஃப் அன்றைய ஜனாதிபதி வேட்பாளர் பிரேமதாஸாவுடன் ஒப்பந்தம் ஒன்றைச் செய்து தேர்தல் சட்டத்தில் சிறிய கட்சிகளை இல்லாதொழிக்கும் 12.5% வெட்டுப் புள்ளியை 5% மாகக் குறைக்கச் செய்து அக்கட்சிகளைக் காப்பாற்றினார். ஆனால் இன்றைய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவம் ரணிலுடன் பலமுறை கூட்டுச் சேர்ந்து எதைத்தான் சாதித்தது. மர்ஹ¤ம் அஷ்ரஃப் அவர்களின் கூற்றுக்களை தூக்கி எறிந்துவிட்டு அவரை அவமதித்த ரணிலுடன் மீண்டும் ஒப்பந்தம் செய்தது முருங்கையில் மீளவும் வேதாளம் ஏறியது போல் உள்ளது. ஆனால் தேர்தல் காலங்களில் கட்சியின் வெற்றிக்கு அவரின் தலைப்பாகையுடன் கூடிய சுவரொட்டிகளை காட்சிப்படுத்துவதை மட்டும் மறந்துவிடவில்லை.

கீர்த்திஸ்ரீ ஏ.பி. தாவூட்
ஜே. பி

நன்றி தினகரன்

1 comment:

  1. "keerthisri" , who is given the title for you,who is he ?ilankainet could you please tell us

    ReplyDelete