Monday, November 16, 2009

ஜெனரல் சரத் பொன்சேகா ஓய்வு பெற்றார்.

இலங்கை இராணுவத்தில் அதிககாலம் சேவையாற்றிய பெருமையுடன் முப்படைகளின் பிரதான அதிகாரி ஜெனரல் சரத் பொன்சேகா இன்று காலையுடன் ஒய்வு பெற்றார். அவரது பிரியாவிடை நிகழ்வு இராணுவத் தலைமையகத்தில் இடம்பெற்றது. முப்படையினரதும் இராணுவ மரியதையை ஏற்றுக்கொண்டார். அங்கு இடம்பெற்ற இராணுவ அணிவகுப்பின்போது முப்படைகளின் தளபதிகளில் எவரும் பங்கெடுத்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

காரியாலயத்தில் இருந்து வெளியயேறிய அவர் தான் இராணுவத் தளபதியாக நடவடிக்கைகளை மேற்கொண்டபோது தனக்கு பூரண ஒத்துழைப்பை வழங்கிய சகல ஊடகங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் நன்றியை தெரிவித்துடன், நாட்டை பயங்கரவாதத்தில் இருந்து மீட்கும் பயணத்தில் தன்னோடு உழைத்து தமது இன்னுயிர்களை தியாம் செய்த, மற்றும் அங்கவீனர்களான அனைத்து போர் வீரர்களுக்கும் தலைவணங்குவதாக தெரிவித்த அவர் அவர்களின் குடும்ப அங்கத்தவர்களுக்கு தனது மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

எதிர்காலம் தொடர்பாக கேட்டபோது, இந்த நாட்டின் இராணுவ தளபதியாக எனது முழு சேவையையும் என் மக்களுக்கு வழங்கியுள்ளளேன், அதை தொடர்ந்தும் செய்ய ஆவலாகவுள்ளேன் என அதை எவ்வாறு செய்வேன் என்பதை உங்கள் அனைவர் முன்னியையிலும் இன்னும் 2 அல்லது 3 தினங்களில் தெரிவிப்பேன் எனக் கூறினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com