புலிகளின் சர்வதேச நிர்வாக பிரிவில் செயற்பட்டுவந்த சுவீடன் சுரேஸ் என்பவர் நோர்வேயில் உள்ள புலிகளின் முன்னணி ஆதரவாளர்கள் வீடுகளினுள் புகுந்து நகைகள், பணம், மற்றும் விலை மதிக்கத்தக்க பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக தெரியவருகின்றது.
சுவீடன் பிரஜாவுரிமை கொண்டுள்ள இவர் கடந்த 3 வருடங்களாக நோர்வே நாட்டில் புலிகளின் காரியாலயத்தில் தங்கியிருந்து அவ்வியக்க செயற்பாடுகளில் ஈடுபட்டுவந்திருந்தார். இத்தருணத்தில் புலிகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த நோர்வேயிலுள்ள குடும்பங்கள் சிலவற்றின் தகவல்களை அறிந்திருந்த சுரேஸ் மூன்று வீடுகளினுள் நுழைந்து மேற்படி கொள்ளையை நாடத்திவிட்டு நோர்வேயில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.
சம்பவம் தொடர்பாக நோர்வே பொலிஸில் முறையிடப்பட்டதை தொடர்ந்து நோர்வே பொலிஸார் சுரேஸை கைது சர்வதேச பொலிஸாரின் உதவியை நாடிள்ளனர்.
No comments:
Post a Comment