தமிழ் மாணவர்கள் மீது அநீதி இழைக்கப்பட்டபோது அமைதி காத்துள்ளோம். மாணவர் சங்கத் தலைவர்.
இலங்கையில் தமிழ் மாணவர்களது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டபோது மாணவர் சங்கத்தினராகிய நாம் மௌனம் காத்துள்ளளோம். ஆனால் அது அவர்கள் தமிழர்கள் என்ற காரணத்திற்காக அல்ல, அன்று புலிகளுக்கும் அரச படையினருக்கும் இடையில் யுத்தம் இடம்பெற்றபோது அவ்வாறு நாம் அமைதிகாக்க நிர்பந்திக்கப்பட்டிருந்தோமே தவிர நாம் இனவாதிகள் அல்லர் என பல்கலைக்கழகங்களின் உள்வாரி மாணவர்கள் சங்கத் தலைவர் (Convenor of the Inter University Student Union (IUSF)) ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
பேராதெனிய பல்கலைக்கழகத்தில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள துவாரகா எனும் மாணவியின் விடுதலை வேண்டி இடம்பெற்றுவரும் போராட்டங்கள் தொடர்பாக கருத்து தெரிவித்த உடுல், பிரிவினைவாத பயங்கரவாதிகளுக்கு எதிரான யுத்தம் இடம்பெறுகையில் தமிழ் மாணவர்கள் கடத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டபோது பல மாணவர் ஒன்றியங்களைச் சேர்ந்த நாம் அமைதி காத்திருக்கின்றோம். ஆனால் அன்று இருந்த நிலைமைவேறு, இன்றுள்ள நிலைமைவேறு அன்று இனவாதத்திற்கு பால்வார்ப்பதற்காக நாம் அவ்வாறு நடந்து கொள்ளவில்லை. ஆனால் இன்றுள்ள நிலையில் அவ்வாறான நிலைமைகளை இடம்பெற நாம் அனுமதிக்கப்போவதில்லை. எனவே துவாரகா விடுதலை செய்யப்படும் வரை எமது போராட்டங்கள் தொடரும் என அவர் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment