Thursday, November 26, 2009

பொது வேட்பாளர் சரத் பொன்சேகாவிற்கு ஐ.தே.க ஆதரவு. ரணில்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிடவுள்ள ஜெனரல் சரத்பொன்சேகாவிற்கு ஐக்கிய தேசியக் கட்சி தனது பூரண ஆதரவை வழங்கும் என கட்சியின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் இடம்பெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் தெரிவித்தார்.

அங்கு பேசிய அவர் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக கட்சி பல தடவைகள் கூடி ஆராய்ந்ததாகவும், இன்று காலை இடம்பெற்ற கட்சியின் நிறைவேற்றுக்குழுக் கூட்டத்தில் ஜெனரல் பொன்சேகாவை ஆதரிப்பதென்ற முடிவை எட்டியதாகவும் தெரிவித்த அவர், கட்சியின் பிரதேச அமைப்பாளர்கள் தொட்டு சகல செயற்பாட்டாளர்களையும் உறுப்பினர்களையும் ஆதரவாளர்களையும் சரத்பொன்சேகாவின் வெற்றிக்கு உழைக்குமாறும் வேண்டினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com