ஜனாதிபதி காத்தான்குடிக்கு விஜயம்.
இலங்கை நாட்டின் அதி மேன்மைதகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் சரித்த முக்கியத்துவம் வாய்ந்த விஜயம் ஒன்றினை காத்தான்குடிக்கு எதிர் வரும் முற்பதாம் திகதி மேற்கொள்ளவுள்ளார்.
காத்தான்குடி கடற்கரை வீதியில் அமைந்துள்ள முகைதீன் ஜூம்மாப் பள்ளிவாயலில் விஸ்தரிக்கப்பட்டு கட்டப்படுவதற்கான அடிக்கல் நாட்டுவதற்காக ஜனாதிபதி வருகை தரவுள்ளார். ஜனாதிபதியின் வருகை குறித்த திகதியில் சரியாக இடம்பெறுமா எனத் தெரியவில்லை. பாதுகாப்புக் காரணங்களுக்காக இதில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
பள்ளிவாயலுக்கு அடிகல்லை முஸ்லீம் அல்லாத ஒருவர் நாட்ட முடியுமா? என சில மதப்பிரமுகவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்? இதற்கான விடையை இலங்கை ஜம்மியத்துல் உலமா சபைதான் தர வேண்டும்.
என்றாலும் அதி மேதகு ஜனாதிபதி அடிகல் நாட்ட வருகிறாரா? அல்லது அந்த வைபவத்தில் விசேட அதிதியாக கலந்து கொள்கிறாரா? என்பது சரியாகத் தெரியவில்லை. எது எவ்வாறாயினும் இந்நிகழ்வ்வு கிழக்கில் வாழும் முஸ்லீம்கள் மத்தியில் ஜனாதிபதிக்கான ஆதரவினை பலப்படுத்தும் என்பது உறுதி.
கிழக்கிலிருந்து விசேட தொடர்பாளர்.
0 comments :
Post a Comment