இலங்கை சிறுபாண்மை இனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அரசியல் கட்சிகளின் பிரதி நிதிகள் இன்று 20 சூரிச் மாநிலத்தில் ஒன்று கூடி எதிர்காலத்தில் சிறுபாண்மையினக் கட்சிகளின் நடவடிக்கைகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பது தொடர்பாக கலந்தாலோசிக்கவுள்ளனர்.
இங்கிலாந்து தமிழர் தகவல் மையத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் இலங்கையில் நேர் எதிர் அணியில் இருந்து அரசியல் செய்கின்ற கட்சிகள் அனைத்தும் இணைந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். தமிழ் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி, சம்பந்தன் தலைமையில் மாவை சேனாதிராஜா, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத் தலைவர் சித்தார்த்தன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (நாபா அணி) தலைவர் சுகு, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் தலைவர் பிள்ளையான், ஈழ மக்கள் ஜனநாயக் கட்சித் தலைவர் டக்ளஸ் தேவானந்தா, மலைக மக்கள் முன்னணித் தலைவர் ஆறுமுகம் தொண்டமான், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம், மற்றும் அதாவுல்லா உட்பட மேலும் பல அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிகழ்விற்கு பார்வையாளர்களோ, ஊடகவியலாளர்களோ அனுமதிக்கப்படமாட்டார்கள் என தெரியவருகின்றது.
இலங்கையில் சிறுபாண்மை இனங்களுக்கான சமவுரிமை தொடர்பான விடயங்களை மையப்படுத்தியயே இங்கு பேசப்படும் என தெரிவருகின்ற போதிலும் இக்கலந்துரையாடலை ஏற்பாடு செய்துள்ள தமிழர் தகவல் மையத்தினர் தமிழ் கட்சிகளின் தலைவர்களுக்கு சமஉரிமை வழங்க மறுத்துள்ளதாக திடுக்கிடும் தகவல் ஒன்று கிடைத்துள்ளது.
இக்கலந்துரையாடலில் பங்குகொள்வோருக்கான விமானச் சீட்டு முதல் இருப்பிடம் உணவு வரையான சகல செலவுகளையும் ஏற்பாட்டாளர்களே ஏற்றுக்கொண்டுள்ளபோதும், சில பிரதிநிதிகள் தமது சொந்த செலவிலேயே விமானச் சீட்டுக்களை கொள்வனவு செய்துள்ளனர். இறுதியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட சில கட்சித் தலைவர்கள் ஏற்பாட்டாளர்களின் விமானச் சீட்டுக்களுக்கா காத்திருந்தபோது, தலைவர்களில் சிலருக்கு விமானத்தில் 1ம் தர இருக்கைகளும் சிலருக்கு 2ம் தர இருக்கைகளும் கொள்வனவு செய்யப்பட்டிருந்தது. இவ்விடயத்தினை ஏற்றுக்கொள்ள மறுத்த தலைவர்களில் சிலர் தமது சொந்தப் பணத்தில் வேறு விமானங்களில் சீட்டுக்களை பெற்றுக்கொண்டு சென்றுள்ளனர்.
சமவுரிமை தொடர்பான கருத்துக்களை முன்மொழிவோர், தாம் மற்றவர்களுக்கு சமவுரிமை வழங்க தயாராக இருக்கினரா என்பதை தெளிவுபடுத்த இச் சிறிய விடயங்கள் சான்றாகும்.
தமிழர் தகவல் மையத்தினரின் இச்செயல் மிகவும் அநாகரிகமானது என மக்களால் பேசப்படுவதை உணர முடிகின்றது.
No comments:
Post a Comment