வடபகுதியிலிருந்து இடம்பெயர்ந்து கிழக்கில் தங்கியுள்ள ஆசிரியர்களுக்கு அவர்களுக்கு பொருத்தமான பாடசாலைகளில் அந்தந்தப் பகுதிகளில் தற்காலிக நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
வடக்கிலிருந்து இடம்பெயர்ந்துள்ள ஆசிரியர்களை கல்வி சேவையில் ஈடுபடுத்துவதற்காக இந்த தற்காலிக ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்த அவர் அவ்வாறு இடம் பெயர்ந்து கிழக்கில் வசிக்கும் ஆசிரியர்கள் அந்தந்த கல்வி வலயப்பணிப்பாளர்களினூடாக விண்ணப்பிக்குமாறு கூறியுள்ளார்.
இந்த நடவடிக்கை தற்காலிகமானது அத்துடன் அந்தந்த ஆசிரியர்களின் தகமைகளுக்கு ஏற்ப அவர்கள் வசிக்கும் பிரதேசப் பாடசாலைகளிலேயே இவர்கள் கல்விச் சேவையில் ஈடுபடுத்தப்படுவார்கள் என அவர் தெரிவித்தார்.
கிழக்கிலிருந்து விசேட தொடர்பாளர்.
No comments:
Post a Comment