Thursday, November 26, 2009

சிறிலங்கா சுதந்திரக் கட்சி (மக்கள் பிரிவு) ஜெனரல் பொன்சேகாவுக்கு ஆதரவு. மங்கள சமரவீர

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிடவுள்ள ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு சிறிலங்கா சுதந்திக் கட்சி (மக்கள் பிரிவு) தனது பூரண ஆதரவை வழங்கும் என அக்கட்சியின் தலைவர் மங்கள சமரவீர ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஐக்கிய தேசிய முன்னணி ஆட்சி அமைக்குமாக இருந்தால் அவ் அரசாங்கத்தின் பிரதம மந்திரியாக ரணில் விக்கரமசிங்க நியமிக்கப்படுவார் எனக் கூறிய அவரிடம் சரத் பொன்சேகா ஜனாதிபதியானால் ராணுவ ஆட்சி ஒன்று இடம்பெற சாத்தியம் உண்டல்லவா எனக் கேட்டபோது, தான் அவ்வாறு நம்பவில்லை எனவும் இன்றைய மஹிந்த ஆட்சியிலேயே இராணுவ ஆட்சி காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com