இராணுவ ஆட்சி தொடர்பாக எச்சரிக்கின்றார் நந்தன குணதிலக.
விமல் வீரவன்ச தனது தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக எந்த கீழ் நிலைக்கும் செல்லக்கூடிய சந்தர்ப்பவாதியாவார்.
ஜேவிபி யில் இருந்து பிரிந்த விமல் வீரவன்ச தலமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும், உல்லாசத்துறை அமைச்சருமான நந்தன குணத்திலக களுத்துறைப் பிரதேசத்தில் தனது கட்சி உறுப்பினர்களைச் சந்தித்தபோது எதிர்காலத்தில் இராணுவ ஆட்சி ஒன்று உருவாகலாம் என எச்சரித்துள்ளார்.
அவர் மேலும் பேசுகையில், ஜெனரல் சரத்பொன்சேகா ஜனாதிபதி தேர்தலில் பங்குபற்றுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றது. அவர் தேர்தலில் வெற்றி பெறுவாரானால் பங்களாதேஷ், மியன்மார், பாக்கிஸ்தான் போன்று இலங்கையிலும் இராணுவ ஆட்சி இடம்பெறலாம் என எச்சரித்துள்ளார்.
கட்சியின் தலைவர் விமல் வீரவன்சவுடனான முரண்பாட்டின் நிமிர்த்தம் கட்சியில் இருந்து வெளியேறிய நந்தன குணதிலக, விமல் வீரவன்சவை மிகவும் விமர்சித்துள்ளதுடன், விமல் வீரவன்ச தனது தேவைகளை பூர்த்தி செய்துகொள்வதற்காக எந்த கீழ் நிலைக்கும் செல்லக்கூடிய சந்தர்ப்பவாதியாவார் எனக்குறிப்பிட்டு கட்சி உறுப்பினர்கள் அனைவரும் அவரை நிராகரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
மேலும் தான் சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் மிகவிரைவில் இணையப்போவதாகவும், பாணந்துறை பிரதேச அமைப்பாளர் ரெஜினோல்ட கூரேயை நீக்கி விட்டு தன்னை அப்பதவிக்கு நியமிக்க ஜனாதிபதி திட்டமிட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
0 comments :
Post a Comment