கைக்கு எட்டிய தொலைவில் பின் லாடன் மறைந்திருந்தார்
அமெரிக்கா தேடி வரும் அனைத்துலக பயங்கரவாதி ஒசாமா பின் லாடன், ஆப்கானிஸ்தானில் 2001-ம் ஆண்டு அமெரிக்கப் படையினருக்கு கைக்கு எட்டிய தொலைவிலேயே மறைந்திருந்ததாக அமெரிக்க செனட் அறிக்கை ஒன்று கூறுகிறது.அல் காய்தா அமைப்பின் தலைவரான பின் லாடனைப் பின்தொடர்வதில்லை என்று அப்போதைய அமெரிக்க ராணுவத் தலைவர்கள் எடுத்த முடிவால் பின் லாடன் அன்று தப்பிச் செல்ல நேர்ந்தது என்று அந்த அறிக்கை கூறியது.
வெளியுறவு குழுவின் ஜனநாயகக் கட்சி உறுப்பினர் ஒருவர் அந்த அறிக்கையை தயார் செய்துள்ளார். பின் லாடனை உயிருடன் பிடிக்கவோ அல்லது கொல்லவோ தவறியதால் மோசமான பின் விளைவுகள் ஏற்பட்டதாக அந்த அறிக்கை கூறுகிறது.
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, ஆப்கானிஸ்தானுக்கு கூடுதல் அமெரிக்க வீரர்களை அனுப்புவது குறித்த அவரது முடிவை அறிவிக்கவுள்ள வேளையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையால், அமெரிக்க முன்னாள் அதிபர் புஷ் நிர்வாகத்தில் இருந்த அதிகாரிகளுக்கும் ராணுவத் தளபதிகளுக்கும் பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது.
பின் லாடன் இன்னமும் ஆப்கானிஸ்தானில் டோரா போரா மலைப் பகுதியில் பதுங்கியிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
0 comments :
Post a Comment