கல்முனையில் மாணவர்கள் மத்தியில் போதைப் பொருள் பாவனை.
கல்முனை கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த சில பிரபல பாடசாலைகளின் மாணவர்கள் மத்தியில் போதைப் பொருள் பாவனை அதிகரித்திருப்பதன் காரணமாக மாணவர்களின் பெற்றோரும், பாடசாலைச் சமூகத்தினரும் பெரும் அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளனர்.
“பான்பராக்” எனப்படும் ஒரு வகை போதைப் பொருள் மாணவர்கள் மத்தியில் பாவனையில் உள்ளதாகவும் சில பிரதேசங்களில் இப்பொருள் மாணவர்களுக்கு விற்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கல்முனைப் பிரதேசத்தில் உள்ள இரு பாடசாலைகளில் இப்போதைப் பொருள் வைத்திருந்ததை ஆசிரியர்கள் கண்டு பிடித்துள்ளனர். இதனையடுத்து இம்மாணவர்களின் பெற்றோர் பாடசாலைகளுக்கு அழைக்கப்பட்டு இவ்விடயம் தொடர்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தனியார் கல்வி நிலையங்களுக்கு வார இறுதி நாட்களிலும் மாலை வேளைகளிலும் செல்லும் மாணவர்களே இவற்றை வாங்கி பாடசாலைகளுக்குக் கொண்டுவருவதாக ஆசிரியர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
கடந்தவாரம் இச்சம்பவங்களைக் கண்டித்து சம்மாந்துறை பிரதேசத்தில் விழிப்புணர்வுக் குழுவொன்று சுவரொட்டிகளை ஒட்டியதுடன் துண்டுப் பிரசுரங்களையும் விநியோகித்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment