Sunday, November 29, 2009

ஏ9 பாதையூடாக கொழும்பிலிருந்து யாழ் சென்ற முதலாவது த.தே.கூ பா.உ பத்மினி.

ஏ9 பாதையூடாக முதன் முதலாக பயணம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் என்ற பெருமையை சிதம்பரநாதன் பத்மினி தட்டிக்கொண்டுள்ளார். பல ஆண்டுகளின் பின்னர் கொழும்பிலிருந்து நேரடியாக யாழ் செல்லக்கூடிய நிலைமை உருவாகியுள்ளதாக அவர் த நேசன் பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் கொழும்பில் இருந்து புறப்பட்ட அவர் நாலரை மணி நேரத்தில் யாழ்பாணத்தை அடைந்ததாகவும், தனது பயணத்தின்போது ஓமந்தை மற்றும் ஆனையிறவு ஆகிய இரு இடங்களில் மாத்திரமே சோதனைச்சாவடிகளைச் சந்தித்தாகவும் தெரிவித்துள்ளதுடன், தனது பயணத்தின்போது எவ்வித விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளும் இருக்கவில்லை எனவும், சாதாரணமாக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மெய்பாதுகாவலர்களாக வழங்கப்பட்டுள்ள ஒரு பொலிஸ் உத்தியோகித்தருடனேயே தான் சென்றதாகவும், செல்லும் வழியில் கிளிநொச்சி பிரதேசத்தில் ஆடுமாடுகளை மாத்திரமே கண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி பிரதேசத்தில் யுத்தத்திற்கு முன்னர் காணப்பட்ட பெரிய கட்டிடங்கள் சிலவற்றை அங்கு காணமுடியவில்லை எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment