கிழக்கு மாகாணத்தில் 9 இலட்சத்தி 95 ஆயிரத்தி 612 பேர் அடுத்துவரும் தேர்தலில் வாக்களிப்பதற்கு தகுதிபெற்றுள்ளனர். திருகோணமலை மாவட்டத்தில் 2008ம் ஆண்டின் வாக்காளர் இடாப்பின் அடிப்படையில் 2 இலட்சத்தி 41 ஆயிரத்தி 133 பேர் தகுதி பெற்றுள்ளனர். திருகோணமலை தேர்தல் தொகுதியைச் சேர்ந்த 86685 பேரும் சேருவில தேர்தல் தொகுதியைச் சேர்ந்த 69047 பேரும் இதில் அடங்குவர்.
அம்பாறை மாவட்டத்தில் 4 இலட்சத்தி 20 ஆயிரத்து 835 பேர் தகுதிபெற்றுள்ளனர். இதன் படி அம்பாறை தேர்தல் தொகுதியில் ஓர் இலட்சத்து 45 ஆயிரத்தி 479 பேரும் சம்மாந்துறை தேர்தல் தொகுதியில் 71 ஆயிரத்தி 442 பேரும் கல்முனை தேர்தல் தொகுதியில் 66 ஆயிரத்தி 135 பேரும் பொத்துவில் தேர்தல் தொகுதியில் ஒர் இலட்சத்து 37 ஆயிரத்தி 779 பேரும் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 3 இலட்சத்தி 33 ஆயிரத்தி 644 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். மட்டக்களப்பு தொகுதியில் ஒர் இலட்சத்து 55 ஆயிரத்து 135 பேரும் பட்டிருப்புத் தொகுதியில் 80 ஆயிரத்து 972 பேரும் இதில் அடங்குவர். இதேவேளை மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் தேர்தல் தொடர்பான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக உதவி தேர்தல் ஆணையாளர் ரி.கிருஸ்ணானந்தலிங்கம் தெரிவித்தார்.
பாடசாலை விடுமுறை ஆரம்பிக்கப்படவுள்ளதால் அதற்கு முன்னராக தேர்தல் கடமைகளில் ஈடுபடவுள்ளதாக ஆசிரியரின் விபரங்கள் திரட்டப்படவுள்ளதாக குறிப்பிட்ட அவர் அதற்கான படிவங்கள் பாடசாலைகளுக்கு அனுப்பிபடவைக்கப்படவுள்ளதாக கூறினார்.
தபால்மூல வாக்களிப்பிற்கு விண்ணப்பிப்பதற்கான படிவங்கள் மற்றும் ஏனைய தினைக்களங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களின் விபரங்களை திரட்டுவதற்கான படிவங்கள் என்பனவற்றை கொழும்பு தேர்தல் அலுவலகத்திலிருந்து எடுத்துவரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
No comments:
Post a Comment