நோர்வே தமிழீழ பாராளுமன்ற தேர்தலை 83% மக்கள் நிராகரித்தனர்.
நோர்வே தமிழ் மக்களை ஏமாற்றுவதற்காக ஈழத் தமிழரவை எனும் பெயரில் செயற்படும் புலிகள் நோர்வேயில் தமிழீழத்தை அங்கீகரிக்கும் தேர்தல் நாடகம் ஒன்றை நடாத்தியிருந்தனர். இந் நாடகத்தின் நோக்கம் தமிழீழத்திற்கான நோர்வே நாட்டுப் பிரதிநிதிகளை தெரிவு செய்வது என கூறப்பட்டிருந்தது.
இவ்வாறு பல மாதங்களாக பூச்சாண்டி காட்டி நேற்றுமுன்தினம் இடம்பெற்ற தேர்தலை 83 சதவீத நோர்வே வாழ் மக்கள் நிராகரித்துள்ளனர். நோர்வேயில் 27000 தமிழ் மக்கள் வாழ்கின்றபோதிலும் தேர்தல் ஏற்பாட்டாளர்களின் விதிமுறைகளின் அடிப்படையில் இத்தேர்தலில் பங்கு கொள்ள சுமார் 20000 தமிழ் மக்கள் வக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற இத்தேர்தலில் 2677 மக்களே வாக்களித்துள்ளனர். இதன் பொருட்டு சுமார் 17 வீத மக்கள் வாக்களித்துள்ளனர். அதாவது தமிழ் மக்கள் புலிகளின் நாடுகடந்த அரசியல் அல்லது செயற்பாடுகளை முற்று முழுதாக நோர்வே வாழ் தமிழ் மக்கள் நிராகரித்துள்ளனர் என்பதை இத்தேர்தல் எடுத்துக்காட்டியிருக்கின்றது.
இதேநேரம் புலிகளின் ஒருதொகுதியினர் மக்களை மிரட்டிய காரணத்தினாலேயே மக்கள் வாக்களிப்பில் பங்கெடுக்கவில்லை என தேர்லை நாடத்திய புலிகள் தெரிவித்துள்ளனர். ஒட்டு மொத்தத்தில் புலிகளின் உள்முரண்பாடுகள் நாடுகடந்த தமிழீழம் என்கின்ற விடயத்தை ஆதரிக்கும் மக்களுக்கு மிகுந்த தலையிடியை கொடுக்கும் என்பதுடன் இவ்விடயங்களில் பங்கெடுக்கும் தமிழர் ஏதோ ஒரு தரப்பினரால் இலக்கு வைக்கப்படலாம் என நம்பப்படுகின்றது.
0 comments :
Post a Comment